பருப்புப் போலி | Paruppu Poli in Tamil

எழுதியவர் Sindhu Sriram  |  16th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Paruppu Poli recipe in Tamil,பருப்புப் போலி, Sindhu Sriram
பருப்புப் போலிSindhu Sriram
 • ஆயத்த நேரம்

  90

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  45

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  5

  மக்கள்

335

0

பருப்புப் போலி recipe

பருப்புப் போலி தேவையான பொருட்கள் ( Ingredients to make Paruppu Poli in Tamil )

 • மைதா - 1 1/2 கப்
 • கடலைப் பருப்பு - 1 1/2 கப்
 • வெல்லம் (துருவல்) - 1 1/2 கப்
 • ஏலக்காய் - 4 பல் (பொடியாக்கப்பட்டது)
 • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
 • தண்ணீர் - தேவையான அளவு
 • எண்ணெய் - 1 தேக்கரண்டி
 • நெய் - தேவையானது

பருப்புப் போலி செய்வது எப்படி | How to make Paruppu Poli in Tamil

 1. ஒரு பாத்திரத்தை எடுத்து மைதா சேர்க்கவும். ஒரு எலஸ்டிக் தன்மையில் மாவைத் தயாரிப்பதற்கு மஞ்சள் தூள், எண்ணெய், தண்ணீர் ஆகியவற்றைச் சேர்க்கவும். மாவை மூடி 30 நிமிடங்களுக்கு வைக்கவும்.
 2. ஒரு கடாயில், கடலைப் பருப்பை வாசனை வரும்வரை வெறுமனே வறுத்து தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, பிரஷர் குக்கரில் பருப்பை வேகவைக்கவும். பருப்பு கூழாகக்கூடாது. நசுக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 3. துருவப்பட்ட வெல்லாம், கடலைப்பருப்பை ஒரு கடாயில் எடுத்துக்கொள்ளவும் (நான்-ஸ்டிக் நல்லது). தொடர்ந்து கலக்கவும். ஆரம்பித்தில் கலவை தண்ணீராக இருக்கும். வெல்லம் சூடேரியதும் அடர்த்தியாகி அல்வா பதத்திற்கு மாறிவிடும்.
 4. கடலைப்பருப்பு வெல்லம் கலவையில் ஏலக்காயைச்சேர்த்து முழுமையாக ஆறவிடவும். ஆறியதும், எலுமிச்சை அளவு உருண்டை பிடித்து எடுத்து வைக்கவுமை். இது தான் பூரணம் (நிரப்பி).
 5. கொஞ்சம் பிசைந்த மாவை எடுத்துக்கொள்ளவும். பூரணத்தை வைத்து மாவால் முழுமையாக மூடவும்.
 6. நன்றாக எண்ணெய் தடவிய வாழை இலையை அல்லது பார்ச்மெண்ட் காகிதத்தை பயன்படுத்தி எண்ணெய் பரப்பில் உருண்டைகளை வைத்து போலி செய்ய ஆரம்பிக்கவும். மையத்திலிருந்து அழுத்த ஆரம்பித்து கடையில் மெலிதானப் போலியை செய்யவேண்டும்.
 7. தவாவைச் சூடுபடுத்தி தயாரித்த போலியை வைத்து இரண்டு பக்கத்தை நெய் விட்டு வேகவைக்கவும். சூடாகப் பரிமாறவும்.

எனது டிப்:

அதற்குள் தீணியாக கொஞ்சம் ஜாதிக்காயையும் உலர் இஞ்சித் தூளையும் நீங்கள் சேர்க்கலாம்.

Reviews for Paruppu Poli in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.