அக்கரவடிசால் அல்லது அக்கார அடிசில் | Akkaravadisal or Akkara Adisil in Tamil

எழுதியவர் Sindhu Sriram  |  16th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Akkaravadisal or Akkara Adisil by Sindhu Sriram at BetterButter
அக்கரவடிசால் அல்லது அக்கார அடிசில்Sindhu Sriram
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    45

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

83

0

Video for key ingredients

    அக்கரவடிசால் அல்லது அக்கார அடிசில் recipe

    அக்கரவடிசால் அல்லது அக்கார அடிசில் தேவையான பொருட்கள் ( Ingredients to make Akkaravadisal or Akkara Adisil in Tamil )

    • குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
    • சமையல் கற்பூரம் - ஒரு சிட்டிகை (விருப்பம் சார்ந்தது)
    • ஏலக்காய் பவுடர் - 1 1/2 தேக்கரண்டி
    • முந்திரிபருப்பும் உலர் திராட்சையும் - 10 ஒவ்வொன்றும்
    • நெய் - 4 தேக்கரண்டி
    • பால் 4-5 கப்
    • வெல்லம் - 1 3/4 கப்
    • பாசிப்பயிர் - 2 தேக்கரண்டி
    • அரிசி - 1/2 கப் (இட்லி அரிசியைத் தவிர எந்த அரிசியும்)

    அக்கரவடிசால் அல்லது அக்கார அடிசில் செய்வது எப்படி | How to make Akkaravadisal or Akkara Adisil in Tamil

    1. உலர் பாத்திரத்தில் அரிசியையும் பாசிப்பயிரையும் வாசனை வரும்வரை வறுக்கவும். கழுவிவிட்டுப் பாலைச் சேர்க்கவும். பிரஷர் குக்கரில் 9 விசில் வரை வேகவைக்கவும். ஒரு அருமையானப்பதத்தை அடைய முயற்சிக்கிறோம்.
    2. வெல்லத்தை 1/2 கப் தண்ணீரில் கரைத்து கொதி நிலைக்குக் கொண்டுவரவும். வெல்லம்முழுவதுமாக் கரையவேண்டும், உங்களிடம் தெளிவானத் திரவம் இருக்கவேண்டும். இதில் அழுக்கு இல்லாமல் வடிக்கட்டி எடுத்து வைக்கவும்.
    3. இதற்கிடையில், குங்குமப்பூவை வெதுவெதுப்பானப் பாலில் ஊறவைக்கவும். கடாயை சூடுபடுத்தி கொஞ்சம் நெய் விட்டு முந்திரி பருப்பு, உலர் திராட்சையை பொன்னிறமாகும்வரை வறுத்து எடுத்து வைக்கவும்.
    4. ஒரு கணமானப் பாத்திரத்தை எடுத்து சாதத்தையும் பாசிப்பயிர் கலவையையும் சேர்க்கவும். அவற்றோடு வெல்லத்தைச் சேர்த்து மீண்டும் சூடுபடுத்தவும். கொதிக்க ஆரம்பிக்கும், கலவை மேலெழும்பும். வெல்லத்தின் வாசனை அற்புதமாக இருக்கம்.
    5. குங்குமப்பூ, ஏலக்காய், வறுத்த உலர் பழங்களைச் சேர்த்து மேலும் 2 நிமிடங்களுக்கு கொதிக்கவிட்டு அடுப்பை நிறுத்தவும். சூடாகப் பரிமாறவும்.

    எனது டிப்:

    பதம் விழுவதுபோல் இருக்கவேண்டும் ஆனால் ஊற்றக்கூடாது கெட்டியாகவும் இருக்கக்கூடாது.

    Reviews for Akkaravadisal or Akkara Adisil in tamil (0)