வீடு / சமையல் குறிப்பு / பாதாம் பர்ஃபி

Photo of Badam / Almond Barfi by Shreela Sasidharan at BetterButter
1040
24
4.7(0)
0

பாதாம் பர்ஃபி

May-16-2016
Shreela Sasidharan
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சிம்மெரிங்
  • ரோசஸ்டிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பாதாம் .... 1 கடோரி
  2. பால் ... ஏறக்குறைய 1/2 கப்
  3. சர்க்கரை ..2& 1/4 கடோரி
  4. நெய்.. குறைந்தது 1 கடோரி
  5. ஏலக்காய் தூள் ... 1 தேக்கரண்டி
  6. பாதாம்.. 10.. பாதியாக்கப்பட்டது அலங்கரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. பாதாமைக் கழுவி இரவு முழுவதும்அல்லது கிட்டத்தட்ட வெந்நீரில் 2 மணி நேரங்கள் ஊறவைக்கவும். தோலை உரித்து மீண்டும் கழுவிக்கொள்ளவும். போதுமான பாலைச் சேர்த்து சாந்தாக அரைத்துக்கொள்ளவும். பாதாம் சாந்தை எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. நெய்யை ஒரு கடாயில் சூடுபடுத்திக்கொள்ளவும், அது சூடாகட்டும்.
  3. ஒரு தாளியை அல்லது தட்டை எண்ணெய்த் தடவு எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. பாதாம் சாந்தையும் சர்க்கரையையும் ஒரு கணமான அடிப்பாகமுள்ள நான்-ஸ்டிக் பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளவும். நன்றாகக் கலந்து 5 நிமிடங்களுக்கு எடுத்து வைக்கவும்.
  5. 5 நிமிடங்களுக்குப் பிறகு, பாத்திரத்தைச் சூடுபடுத்தி தொடர்ந்து மிதமானச் சூட்டில் கலக்கவும்.
  6. கலவை விரைவிலேயே அடர்த்தியாகத் தொடங்கிவிடும்.
  7. இந்த நிலையில் இருந்து, தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக உருக்கிய நெய்யை சேர்த்துக்கொண்டே இருக்கவும். நெய் பாதாம் கலவைக்குள் உறிஞ்சப்படுவதை பார்ப்பீர்கள்.
  8. கலவை பாத்திரத்தில் பக்கவாட்டிலிருந்து விடுபடும்வரைத் தொடரவும், அதிகப்படியான நெய் தெரிய ஆரம்பிக்கும். இதன்பொருள், இனிமேல் கலவையில் உறிஞ்சப்படாது என்பது.
  9. அடுப்பை நிறுத்திவிட்டு, நன்றாகக் கலந்து உடனே நன்றாக எண்ணெய் தடவிய தாளியில் அல்லது தட்டில் மாற்றிக்கொள்ளவும்.
  10. தாளியை/தட்டைத் தட்டவும். அப்போதுதான் தட்டு முழுவதும் சமமாகப் பரவும். எண்ணெய் தடவியக் கரண்டியால் மென்மையாக்கவும்.
  11. பாதாம் பாதிகளை மேல் பகுதியில் தூவி அலங்கரிக்கவும்.
  12. ஏறத்தாழ 5 நிமிடங்களுக்குப் பிறகு, சூடாக இருக்கும் போது, கிட்டத்தட்ட கெட்டியாக இருக்கும்போது, நெய் தடவியக் கத்தியால் தேவையான வடிவத்தில் வெட்டிக்கொள்ளவும்.
  13. முழுமையான ஆறும்வரை எடுத்துவைக்கவும். மெதுவாக பாதாம் பர்ஃபி துண்டுகளை எடுத்து சேமித்துக்கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்