சாம்பார் | Sambhar in Tamil

எழுதியவர் Priya Mani  |  16th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Sambhar by Priya Mani at BetterButter
சாம்பார்Priya Mani
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    5

    மக்கள்

437

0

Video for key ingredients

  • Sambhar Powder

சாம்பார் recipe

சாம்பார் தேவையான பொருட்கள் ( Ingredients to make Sambhar in Tamil )

  • வேகவைத்தத் துவரம் பருப்பு 2 கப்
  • உங்களுக்குப் பிடித்த காய்கறிகள் ஏதாவ: (சதுரமாக வெட்டப்பட்டது)
  • சிறிய வெங்காயம் உங்கள் விருப்பத்திற்கேற்ப
  • முருங்கைக்காய் உங்கள் விருப்பத்திற்கேற்ப
  • பூசணிக்காய் 1 கப்
  • கேரட் 1 கப்
  • தக்காளி 7ல் இருந்து 8 வரை (விருப்பத்திற்கேற்ப)
  • எலுமிச்சை அளவு புளி உருண்டைகள் தண்ணீரில் பிழிந்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  • சுவைக்கேற்ற உப்பு
  • மஞ்சள் தூள் 1/2 கப்
  • சாம்பார் பொடி 2 தேக்கரண்டி
  • காஷ்மீர் மிளகாய் பொடி 3/4 தேக்கரண்டி
  • ஒரு சிட்டிகை பெருங்காயம்
  • காய்கறிகளை வதக்க எண்ணெய்
  • தாளிப்பதற்கு 1 தேக்கரண்டி நெய்
  • கடுகு 1/2 தேக்கரண்டி
  • வெந்தயம் 1/2 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை கொத்துமல்லி உங்கள் விருப்பத்திற்கேற்ப
  • 1 காய்ந்த மிளகாய்

சாம்பார் செய்வது எப்படி | How to make Sambhar in Tamil

  1. ஒரு கடாயில், எண்ணெய் சேர்க்கவும். சூடானதும் வெங்காயம், தக்காளி அதைத் தொடர்ந்து காய்கறிகளைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  2. காய்கறிகள் பாதி வெந்ததும், புளிக்கரைசலை கிட்டத்தட்ட 1 கப் சேர்க்கவும். உப்பு, சாம்பார் பொடி, மிளகாய்த்தூள், பெருங்காயம், மஞ்சள் தூள், சேர்த்து நன்றாகக் கலக்கவும். இது 15ல் இருந்து 20 நிமிடங்கள் கொதிக்கட்டும், அளவு குறையவேண்டும்.
  3. பொடியின் பச்சை வாடை போனதும், வேகவைத்த துவரம் பருப்பையும் தேவையான தண்ணீரையும் சேர்க்கவும். உப்பு சுவை பார்த்துவிட்டு மேலும் 5ல் இருந்து 7 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
  4. கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து நன்றாகக் கலக்கவும். ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
  5. ஒரு தனி கடாயில், நெய் சேர்த்து அவை உருகியதும் கடுகு, வெந்தயம் சேர்த்து, அவை வெடிக்க ஆரம்பித்ததும் காய்ந்த மிளகாய், 1/2 தேக்கரண்டி பெருங்காயம் சேர்த்து அவற்றை வறுக்கவும்.
  6. இந்த தாளிப்பை சாம்பார் பாத்திரத்தில் ஊற்றவும். சூடாகப் பரிமாறவும்.

எனது டிப்:

நெய் எனது இரகசியப் பொருள், தாளிக்கும்போத அருமையான வாசனை தரும்.

Reviews for Sambhar in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.