வீடு / சமையல் குறிப்பு / மாங்காய் சாம்பார்

Photo of Raw Mango Sambar by Sharanya Raghuraman at BetterButter
1607
73
4.8(0)
0

மாங்காய் சாம்பார்

May-16-2016
Sharanya Raghuraman
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • அக்கம்பனிமென்ட்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மாங்காய் - 1 பெரியது, கரடுமுரடாக நறுக்கப்பட்டது, தோலுடன்.
  2. சின்ன வெங்காயம் - 4
  3. மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
  4. துவரம் பருப்பு - 1/2 கப்
  5. சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
  6. தக்காளி - 1, சீரற்று நறுக்கப்பட்டது
  7. தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
  8. கடுகு - 1 தேக்கரண்டி
  9. சீரகம் - 1 தேக்கரண்டி
  10. உப்பு - சுவைக்கேற்ற அளவு
  11. பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
  12. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  13. கறிவேப்பிலை - கையளவு
  14. கொத்துமல்லி - கொஞ்சம் நன்றாக நறுக்கப்பட்டது
  15. புளி - 1 நெல்லிக்காய் அளவு (விருப்பம் சார்ந்தது)
  16. வெல்லம் - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பருப்பை பிரஷர் குக்கரில் 2 கப் தண்ணீர் விட்டு 4 விசில்களுக்கு வேகவைக்கவும். அடுப்பை நிறுத்தவும். பிரஷ் தானாக அடங்கட்டும்.
  2. இதற்கிடையில், தேங்காய் எண்ணெயை ஒரு கடாயில் சூடுபடுத்தி கடுகு சீரகத்தை வெடிக்க வைக்கவும்.
  3. உளுத்தம்பருப்பைச் சேர்த்து அது பொன்னிறமாகும்வரை வறுக்கவும்.
  4. பெருங்காயம், கறிவேப்பிலை சேர்க்கவும்.
  5. இப்போது, வெங்காயம், உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். வெங்காயத்தை நன்றாக வதக்கவும்.
  6. தக்காளியைச் சேர்த்து ஒரு நிமிடம் வேகவைக்கவும்.
  7. தக்காளி நன்றாக வெந்ததும், மாங்காய்த் துண்டுகளையும் 1/2 கப் தண்ணீரையும் சேர்க்கவும். மாங்காய் மிருதுவாக மாறும்வரை வேகவைக்கவும், கூழாக்கவேண்டாம்.
  8. சாம்பார் பொடியையும் புளி கரைசலையும் சேர்க்கவும். புளிக்கரைசல் விருப்பம் சார்ந்தது. மாங்காய் புளிப்பாக இல்லாமல் இருந்தால் மட்டும் சேர்க்கவேண்டும். மாங்காய் புளிப்பாக இருந்தால் புளிசேர்ப்பதை தவிர்க்கவும். கொதி நிலைக்கு வரட்டும்.
  9. வேகவைத்த துவரம்பருப்பை உங்கள் டம்ளரின் பின்பக்கத்தால் மசிக்கவும் அல்லது ஒரு உருளைக்கிழங்கு மேஷரைக் கொண்டு மசித்து இந்தக் குழம்போடு சேர்க்கவும். நன்றாகக் கலக்கி கொதிக்கவிடவும்.
  10. வெல்லம் சேர்க்கவும். உப்புக் காரம் சோதித்து அதற்கேற்றவாறு சேர்க்கவும். சாம்பார் அடர்த்தியாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும்.
  11. கொத்துமல்லி இலைகளைத் தூவி அடுப்பை நிறுத்தவும். மூடியிட்டு பரிமாறுவதற்கு 10 நிமிடத்திற்கு முன்வரை அப்படியே விடவும்.
  12. சூடான காரசாரமான புளிப்பும் இனிப்புமான மாங்காய் சாம்பாரை சாதத்துடன் மகிழவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்