கும்பகோணம் கடப்பா | Kumbakonam Kadappa in Tamil

எழுதியவர் Menaga Sathia  |  16th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Kumbakonam Kadappa by Menaga Sathia at BetterButter
கும்பகோணம் கடப்பாMenaga Sathia
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

36

0

Video for key ingredients

  கும்பகோணம் கடப்பா recipe

  கும்பகோணம் கடப்பா தேவையான பொருட்கள் ( Ingredients to make Kumbakonam Kadappa in Tamil )

  • பூண்டு பற்கள் - 1
  • பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
  • தேங்காய்த் துருவல் - 3 தேக்கரண்டி
  • அரைப்பதற்கு:
  • கறிவேப்பிலை - 1 கொத்து
  • இலவங்கப்பட்டை - 1/2 இன்ச் குச்சி
  • பே இலை - 1
  • கடுகு - 1/4 தேக்கரண்டி
  • எண்ணெய் - 1 தேக்கரண்டி
  • தாளிப்புக்கு:
  • உப்பு- சுவைக்கேற்றபடி
  • எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
  • கொத்துமல்லி - 1 தேக்கரண்டி (நன்றாக நறுக்கப்பட்டது)
  • பிளக்கப்பட்ட பச்சை மிளகாய் - 3
  • வெங்காயம் - 1 பெரியது, நன்றாக நறுக்கப்பட்டது
  • உருளைக்கிழங்கு - 2
  • பாசி பயிர் - 1/2 கப்

  கும்பகோணம் கடப்பா செய்வது எப்படி | How to make Kumbakonam Kadappa in Tamil

  1. *பாசிப் பயிரையும் உருளைக்கிழங்கையும் தனித்தனியே பிரஷர் குக்கரில் வேகவைக்கவும். அதன் பின் உருளைக்கிழங்கைத் தோலுரித்து மசித்துக்கொள்ளவும், பாசிப்பயிரையும் மசித்துக்கொள்ளவும். அரைப்பதற்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  2. * ஒரு பாத்திரத்தில் எண்ணெயைச் சூடுபடுத்தி தாளிப்புக்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ளப் பொருள்களை தாளித்துக்கொள்ளவும். நறுக்கப்பட்ட வெங்காயம், பிளக்கப்பட்ட பச்சை மிளகாயை மிதமானச் சூட்டில் வெங்காயம் ஒளி ஊடுருவும்வரை வதக்கவும், நிறம் மாறாமல் பார்த்துக்கொள்ளவும்.
  3. * 1 கப் தண்ணீர் + மசித்த பாசிப்பயிரையும் உருளைக் கிழங்கையும் உப்புடன் சேர்த்து கொதி நிலைக்குக் கொண்டுவரவும். இறுதியாக அரைத்த சாந்தைச் சேர்த்துக்கொள்ளவும். நன்றாகக் கலக்கவும். தொடர்ந்து கலக்கிக்கொண்டே இருக்கவும். மேலும் 2-3 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  4. * பச்சை வாடை போனதும் அடுப்பை நிறுத்திவிடவும். எலுமிச்சைச் சாறையும் நறுக்கப்பட்ட கொத்துமல்லியையும் சேர்க்கவும்.
  5. * இட்லி/தோசையுடன் சூடாகப் பரிமாறவும்.

  எனது டிப்:

  * கடப்பா பொதுவாக வெள்ளை நிறத்தில் இருக்கும், தேவைப்பட்டால் நிறத்திற்காக ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ளவும்.

  Reviews for Kumbakonam Kadappa in tamil (0)