வீடு / சமையல் குறிப்பு / முட்டை பிரியாணி

Photo of Egg briyani by Priya Mani at BetterButter
4023
39
4.5(0)
0

முட்டை பிரியாணி

May-17-2016
Priya Mani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
120 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸ்டீமிங்
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முட்டை - 6
  2. வெங்காயம் 2, இஞ்சி பூண்டு விழுது ஒவ்வொன்றும் 1 தேக்கண்டி புதினாவும் கொத்துமல்லி ஒவ்வொன்றும் ஒரு கையளவு
  3. முழு கரம் மசாலா ஷாகி சீரகம் - 1 தேக்கரண்டி
  4. மசாலா: சீரகப்பொடி, மல்லித்தூள், சிவப்பு மிளகாய்த்தூள், கரம் மசாலா பொடி, ஒவ்வொன்றும் ஒரு தேக்கரண்டி உங்கள் சுவைக்கு ஏற்றவாறு. நான் இங்கே 1 தேக்கரண்டி சேர்த்தேன். மேலும் ஒர கப் தயிரும் பிளக்கப்பட்ட பச்சை மிளகாயும்.
  5. சுவைக்கேற்றவாறு உப்பு, வதக்குவதற்கு எண்ணெய் கிட்டத்தட்ட 2ல் இருந்து 3 தேக்கரண்டி, நெய் 2 தேக்கரண்டி
  6. பாஸ்மதி அரிசி 3 கப்

வழிமுறைகள்

  1. செய்முறை: பாஸ்மதி அரிசியை 1 மணி நேரம் ஊறவைக்கவும். 1 கப் அரிசி 1.5 கப் தண்ணீர் வீதம். 3 கப் அரிசிக்கு 4.5 கப் தண்ணீர்.
  2. நான்-ஸ்டிக் கடாயை வைக்கவும். எண்ணெயைச் சேர்க்கவும், வேண்டுமானால் நெய் அல்லது வெண்ணெய் ... முழு கரம் மசாலாவை அதனுள் போடவும்.. ஷாகி சீரகத்தைச் சேர்க்கவும்.
  3. வெடிக்க ஆரம்பித்ததும் பிளந்த வெங்காயத்தைச் சேர்த்து வெளுக்கும்வரை வதக்கவும். . இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து நன்றாகக் காலக்கவும்.
  4. பிளந்த பச்சை மிளகாய் புதினா, கொத்துமல்லி இலைகளைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.. 5 நிமிடங்கள் வைக்கவும்.
  5. இதற்கிடையில் ஒரு பாத்திரத்தை எடுத்து 1 கப் தயிர் அனைத்து மசாலாக்களையும் அதனுள் ஊற்றவும் ( அனைத்து பொடிகளும்) நன்றாக கலக்கவும். கடாயில் பொடியின் பச்சை வாடை போகும்வரை ஊற்றவும்.
  6. இப்போது ஊறவைத்த தண்ணீரிலிருந்து அரிசியை மட்டும் எடுத்து கடாயில் போட்டு நன்றாகக் கலக்கவும். தண்ணீர் தேவையான உப்பு தேவைப்பட்டால் எண்ணெய் சேர்க்கவும். உப்பு காரம் சரிபார்த்து மூடியிடவும். அதிகமானத் தீயில் 5ல் இருந்து 7 நிமிடங்கள் வைக்கவும்.
  7. அதன்பிறகு சிம்மில் 10 நிமிடங்கள் வைக்கவும். இதற்கிடையில் உங்கள் பிரியாணியைத் தயாரிக்க ஆரம்பிப்பதற்கு முன் முட்டைகளை வேகவைத்துக்கொள்ளவும். பாதியாக நறுக்கிக்கொள்ளவும்.
  8. ஒரு சிறிய கடாயை வைத்து.. கொஞ்சம் எண்ணெய்யை ஊற்றி முட்டைகளை ஒன்றன்பின் ஒன்றாக வைக்கவும். முட்டைகள் உடையாமல் பார்த்துக்கொள்ளவும்.. கொஞ்சம் உப்பு மிளகு முட்டைக்கு மேல் சேர்த்து அவற்றை வறுத்துக்கொள்ளவும்.. மொறுமொறுப்பாகும் வரை..
  9. இப்போது முட்டைகளை பிரியாணியில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்... புதினா கொத்துமல்லியால் அலங்கரிக்கவும்.. எந்தவித ரைத்தாவுடனும் பரிமாறவும், இப்போது உங்கள் சுவையான முட்டை பிரியாணி உண்பதற்கு தயார்....

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்