வீடு / சமையல் குறிப்பு / மட்டன் கட்லெட்

Photo of Mutton cutlet by Margaret Charles at BetterButter
671
0
0.0(0)
0

மட்டன் கட்லெட்

Jun-18-2018
Margaret Charles
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

மட்டன் கட்லெட் செய்முறை பற்றி

எந்நேரமும் சாப்பிடக்கூடிய ருசியான சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • கேரளா
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. மட்டன் கொத்துகறி 200 கி
  2. வேக வைத்த உருளைக்கிழங்கு 3
  3. பொடியாக நறுக்கிய வெங்காயம் 2
  4. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 4
  5. இஞ்சி பூண்டு விழுது 2 தே க
  6. பொடியாக நறுக்கிய தக்காளி 1 (சிறிது)
  7. மஞ்சள் பொடி 1 தே க
  8. மிளகாய் பொடி 2 தே க
  9. மல்லி பொடி 1/2 தே க
  10. கரம் மசாலா 1 தே க
  11. மிளகு பொடி 1/2 தே க
  12. ரொட்டி தூள் 1 கப்
  13. முட்டை 2
  14. உப்பு தேவைக்கேற்ப
  15. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  2. பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  3. பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. கழுவி சுத்தம் செய்த கறியை சேர்த்து வதக்கவும்
  5. பத்து நிமிடங்கள் கழித்து மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லி பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்
  6. தண்ணீர் வற்றி, எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி, கரம் மசாலா, மிளகு பொடி சேர்க்கவும்
  7. அடுப்பை அணைத்து விட்டு , வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்க்கவும்
  8. பின்னர் அதை சிறு உருண்டைகளாக உருட்டி கட்லெட் வடிவில் தட்டவும்
  9. முட்டையை சிறிது உப்பு சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்
  10. கட்லெட்டை முட்டையில் தோய்த்து, ரொட்டி தூளில் பிரட்டி எடுக்கவும்
  11. எல்லாவற்றையும் இவ்வாறு செய்து முடித்த பின், எண்ணையை சூடாக்கி பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்