வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் டாபி

Photo of Chicken Toffee by Margaret Charles at BetterButter
457
0
0.0(0)
0

சிக்கன் டாபி

Jun-18-2018
Margaret Charles
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் டாபி செய்முறை பற்றி

அருமையான மாலை நேர சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • மிடில் ஈஸ்டர்ன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. சிக்கன் கொத்தியது 200 கி
  2. மைதா மாவு - 125 கி
  3. நல்லெண்ணெய் 6 தே க
  4. தண்ணீர் சிறிதளவு
  5. மிளகாய் பொடி 1 தே க
  6. சோம்பு பொடி 1/2 தே க
  7. மல்லி பொடி 1/2 தே க
  8. முட்டை 1
  9. ரொட்டி தூள் 50 கி
  10. உப்பு தேவைக்கேற்ப
  11. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் சேர்த்து, ஐந்து நிமிடங்கள் வதக்கவும்
  2. பின்னர் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லி பொடி, சோம்பு பொடி, உப்பு சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்
  3. நன்கு ஆறிய பின், அதில் முட்டை, ரொட்டி தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  4. சிறிய மிட்டாய் வடிவில் பிடித்து வைக்கவும்
  5. மைதா மாவில் 6 தே க நல்லெண்ணெய் சேர்த்து, மாவுடன் சேர்த்து கலக்கவும்
  6. பின்னர் உப்பை சேர்த்து, தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்
  7. மிக சிறிய உருண்டைகளாக எடுத்து, நன்கு மெலிதாக சிறு பூரிகள் போல தேய்த்து கொள்ளவும்.
  8. அதில் கத்தி வைத்து சிறு கோடுகள் வரையவும்.
  9. உருட்டி வைத்த சிக்கனை உள்ளே வைத்து, மிட்டாய் கவர் மடிப்பது போல மடிக்கவும்.
  10. எல்லாவற்றையும் இவ்வாறு செய்து கொள்ளவும்.
  11. எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொறித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்