பருப்பு வடை | Parippu Vada / Dal Vada in Tamil

எழுதியவர் Sharanya Raghuraman  |  17th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Parippu Vada / Dal Vada by Sharanya Raghuraman at BetterButter
பருப்பு வடைSharanya Raghuraman
  • ஆயத்த நேரம்

    4

    மணிநேரம்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    15

    மக்கள்

334

0

பருப்பு வடை recipe

பருப்பு வடை தேவையான பொருட்கள் ( Ingredients to make Parippu Vada / Dal Vada in Tamil )

  • துவரம் பருப்பு - 3/4 கப்
  • கடலைப் பருப்பு 1/4 கப்
  • சிவப்பு மிளகாய் - 4 எண்ணிக்கை
  • சின்ன வெங்காயம் - 5ல் இருந்து 5, பொடியாக நறுக்கப்பட்டது
  • பெருங்காயம் - ஒரு சிட்டிகை
  • பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
  • இஞ்சி - 2 தேக்கரண்டி, பொடியாக நறுக்கப்பட்டது
  • பச்சை மிளகாய் - 2ல் இருந்து 3 எண்ணிக்கை, நறுக்கப்பட்டது
  • கறிவேப்பிலை - 10 இலைகள், பொடியாக நறுக்கப்பட்டது
  • புதினா இலைகள் - 5 எண்ணிக்கை, நன்றாக நறுக்கப்பட்டது
  • சுவைக்கேற்ற உப்பு
  • பொறிப்பதற்கு எண்ணெய்

பருப்பு வடை செய்வது எப்படி | How to make Parippu Vada / Dal Vada in Tamil

  1. கடலைப்பருப்பையும் துவரம் பருப்பையும் ஒன்றாகக் கழுவி 4 மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.
  2. 4 மணி நேரத்திற்குப் பிறகு, தண்ணீரை பருப்பிலிருந்து முழுமையாக வடிக்கட்டிவிடவும். ஊறவைத்த பருப்பை சிவப்பு மிளகாய், பெருஞ்சீரகம், புதினா இலைகளை தண்ணீர் சேர்க்காமல் சீரற்று வறுத்துக்கொள்ளவும். மென்மையானச் சாந்தாக அரைபடாமல் பார்த்துக்கொள்ளவும். முழு பருப்புகள் இங்குமங்கும் இருப்பது நன்று.
  3. நன்றாக நறுக்கப்பட்ட இஞ்சி, கறிவேப்பிலை, வெங்காயம், பெருங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும்.
  4. போதுமான எண்ணெய் நடுத்தர சிறு தீயில் ஒரு வறுக்கும் பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  5. உங்கள் கைகளை ஈரமாக்கிக்கொள்ளவும். ஒரு எலுமிச்சை அளவுள்ள உருண்டையை பருப்புக் கலவையிலிருந்து எடுத்துக்கொள்ளவும். உள்ளங்ககை மத்தியில் எடுத்து வடைகளைத் தட்டிக்கொள்ளவும். சூடான எண்ணெயில் விடவும்.
  6. அனைத்துப் பக்கங்களும் பொன்னிறமாக மொறுமெறுப்பாக மாறும் வரை பொறிக்கவும்.
  7. இந்த வடையை சமையல் துண்டிற்கு மாற்றி அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சிக்கொள்ளவும். டீ அல்லது காபியுடன் சூடாகப் பரிமாறவும்.

Reviews for Parippu Vada / Dal Vada in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.