வீடு / சமையல் குறிப்பு / கருப்பு மூக்கடலை டிக்கி

Photo of Bengal gram Tikki by Ashwini Rajendran at BetterButter
302
0
0.0(0)
0

கருப்பு மூக்கடலை டிக்கி

Jun-18-2018
Ashwini Rajendran
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கருப்பு மூக்கடலை டிக்கி செய்முறை பற்றி

மாவு சத்து நிறைந்த கருப்பு மூக்கடலை வைத்து செய்யப்படும் சுவையான ஈவினிங் ஸ்நாக்ஸ்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • நார்த் இந்தியன்
  • பான் பிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வேகவைத்த கருப்பு மூக்கடலை 1 கிண்ணம்
  2. பனீர் 1/2 கிண்ணம்
  3. வெங்காயம் 1
  4. கொத்துமல்லி 2 மேசைக்கரண்டி
  5. பூண்டு 10 பல்
  6. பச்சை மிளகாய் 1
  7. சீரகத்தூள் 1 தேக்கரண்டி
  8. கரம் மசாலா 1/2 தேக்கரண்டி
  9. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
  10. உப்பு ருசிக்கேற்ப
  11. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு மிக்ஸி ஜாரில் வேகவைத்த கருப்பு மூக்கடலை பனீர் பச்சைமிளகாய் பூண்டு சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்
  2. தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளவும்
  3. அரைத்த விழுதை ஒரு அகல கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.
  4. இந்த விழுதுடன் மஞ்சள் தூள், சீரகத்தூள், கரம்மசாலா, உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி சேர்த்துக் கொள்ளவும்.
  5. இவற்றை நன்கு பிசைந்து வைக்கவும்
  6. தோசைக்கல்லை தயாராக சூடு செய்யவும்
  7. பிசைந்த கலவையில் இருந்து ஒரு சிறிய உருண்டை அளவு எடுத்து வடை போல் தட்ட வேண்டும்
  8. தயார் செய்த டிக்கியை சூடான தோசைக்கல்லில் வைத்து சிறிது எண்ணெயை சுற்றிலும் ஊற்றி இருபுறமும் பொன்னிறமாகும் வரை வறுத்து எடுக்கவும்.
  9. கிரீன் சட்னியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்