வீடு / சமையல் குறிப்பு / சுண்டைக்காய் வத்தக் குழம்பு

Photo of Sundakkai Vatha Kulambu by Sharanya Raghuraman at BetterButter
1542
13
0.0(0)
0

சுண்டைக்காய் வத்தக் குழம்பு

May-17-2016
Sharanya Raghuraman
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • அக்கம்பனிமென்ட்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
  2. உலர் சுண்டைக்காய் - 1 கையளவு
  3. நல்லெண்ணெய் - தேக்கரண்டி தாளிப்புக்கு
  4. கடுகு - 1 தேக்கரண்டி
  5. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  6. கடலை பருப்பு - 1தேக்கரண்டி
  7. கறிவேப்பிலை - 6 இலைகள்
  8. வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
  9. பெருங்காயம் - ஒரு சிட்டிகை
  10. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  11. சிவப்பு மிளகாய் - 2 எண்ணிக்கை, உடைத்தது
  12. வெங்காயம் - 5ல் இருந்து 6 எண்ணிக்கை
  13. புளி 1 சிறிய எலுமிச்சை அளவு வெந்நீரில் ஊறவைத்தது
  14. சுவைக்கேற்ற உப்பு
  15. வெல்லம் -1ல் இருந்து 2 தேக்கரண்டி உங்கள் இனிப்புத் தேவைக்கேற்ப
  16. சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு சிறிய கடாயில், 1 தேக்கரண்டி நல்லெண்ணெயைச் சூடுபடுத்தவும். உலர் சுண்டைக்காயைச் சேர்த்து சற்றே அடர் நிறம் பெறும்வரை வறுக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி, எடுத்து வைக்கவும்.
  2. ஒரு கடாயில், 1 தேக்கரண்டி எண்ணெயைச் சூடுபடுத்தி கடுகைப் பொறிக்கவிடவும். கடலைப் பருப்பு உளுந்து சேர்த்து அவை பொன்னிறமாகும்வரை வறுக்கவும்.
  3. இப்போது சிவப்பு மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்க்கவும்.
  4. வெங்காயம், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வெங்காயம் வெளுக்கும்வரை வதக்கவும்.
  5. புளியிலிருந்து சாறை முழுமையாகப் பிழிந்தெடுத்து சாறை இதனோடு சேர்க்கவும். கொதி நிலைக்கு வரட்டும்.
  6. வறுத்த சுண்டைக்காயையும் சாம்பார் பொடியையும் சேர்க்கவும் மூடியைப் போட்டு மூடி மேலும் 15ல் இருந்து 20 நிமிடங்கள் மிதமானச் சூட்டில், எண்ணெய் பிரியும்வரை வேகவைக்கவும். குழம்பு அடர்த்தியாகிவிடும்.
  7. இறுதியாக வெல்லாம் சேர்த்து தேவைப்பட்ட பதத்தை அடைந்ததும் அடுப்பை நிறுத்திவிடவும்.
  8. அடுப்பை நிறுத்திவிட்டு சூடான சாதத்தோடு பரிமாறுக.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்