வீடு / சமையல் குறிப்பு / சில்லி பொட்டேட்டோ

Photo of CHILLI POTATO by Munsila Fathima at BetterButter
277
0
0.0(0)
0

சில்லி பொட்டேட்டோ

Jun-18-2018
Munsila Fathima
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சில்லி பொட்டேட்டோ செய்முறை பற்றி

பொதுவாக சைனீஸ் சமையல் முறையில் தக்காளி சாஸ் பயன்படுத்துவது வழக்கம். இங்கு நான் சாஸ்க்கு பதில் தக்காளி சிவப்பு மிளகாய் பயன்படுத்தியுள்ளேன்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சைனீஸ்
  • ஸ்டிர் ஃபிரை
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு 300 கிராம்
  2. வெங்காயம் ஒன்று
  3. குடைமிளகாய் ஒன்று
  4. தக்காளி-2
  5. சிவப்பு மிளகாய் 8 லிருந்து 10
  6. சர்க்கரை கால் தேக்கரண்டி அளவு
  7. மிளகாய்த் தூள் கால் தேக்கரண்டி
  8. உப்பு தேவைக்கு
  9. எண்ணெய் பொறுக்க ,வருக்க
  10. சோயா சாஸ் காலிலிருந்து அரை தேக்கரண்டி அளவு
  11. சோள மாவு ஒரு தேக்கரண்டி
  12. தண்ணீர் 2 தேக்கரண்டி
  13. இஞ்சி சிறிய துண்டு
  14. பூண்டு 3 பெரிய பல்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை நறுக்கி மெல்லிய துணியில் அல்லது பேப்பரில் வைத்து ஈரத்தை காய வைத்துக் கொள்ளுங்கள்
  2. அதே சமயம் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தக்காளி மற்றும் சிவப்பு மிளகாய் சேர்த்து வேக வைத்துக் கொள்ளுங்கள்
  3. வேக வைத்த தக்காளி மற்றும் சிவப்பு மிளகாயை மிக்ஸியில் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளுங்கள்
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் உருளைக்கிழங்கை நன்கு மொறுமொறுவென்று பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள்
  5. பின்பு அகலமான பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்
  6. அதனுடன் வெங்காயம் ,குடமிளகாய், உப்பு சேர்த்து சற்று வதக்கவும்
  7. அதனுடன் சோயா சாஸ் சேர்த்து வதக்கவும் சேர்க்கும்போது பார்க்கவும் அதிகமாக சேர்த்தால் நிறம் மாறிவிடும்
  8. பின்பு அதனுடன் மிளகாய் தூள்,தக்காளி கலவையை சேர்த்து சற்று கொதிக்க விடவும்
  9. ஏற்கனவே தக்காளியை வேக வைத்ததால் அதிகம் கொதிக்க விட தேவை இல்லை
  10. அதன் உடன் சோள மாவு தண்ணீர் சேர்த்து கலந்த கலவையை ஊற்றி வதக்கவும்
  11. நெருப்பை கூட்டி நன்கு கூட்டு டிரை ஆகும் வரை வதக்கி கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்