வீடு / சமையல் குறிப்பு / மிளகாய் பூண்டு சௌமியன்

Photo of Chilli garlic chowmein by Sujata Limbu at BetterButter
2396
232
4.8(0)
0

மிளகாய் பூண்டு சௌமியன்

Aug-12-2015
Sujata Limbu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • பாச்சிலர்ஸ்
  • சைனீஸ்
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1 பாக்கெட் வெஜ் ஹாக்கா நூடுல்ஸ் (180 கிராம்)
  2. 1 நடுத்தர அளவுள்ள வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
  3. 1 நடுத்தர அளவுள்ள கேரட் (ஜூலியன் வகையில் நறுக்கியது)
  4. 115 கிராம் முட்டைக்கோஸ் (நீள வாக்கில் நறுக்கியது)
  5. 3-4 இலைகள் பசலிக்கீரை
  6. 2 பச்சை மிளகாய் (உங்கள் ருசிக்கேற்ப கூடவோ குறைவாகவோச் சேர்க்கவும்)
  7. 8 பல் பூண்டு (பொடியாக நறுக்கியது)
  8. 20 மிலி ரீபைண்டு அல்லது ஆலிவ் எண்ணெய்
  9. 15 மிலி சோயா சாஸ்
  10. 8 மிலி வெள்ளை வெனிகர்
  11. 5 மிலி பச்சை மிளகாய் சாஸ்
  12. ஒரு தாராளமானச் சிட்டிகை கருமிளகு
  13. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. ஒரு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தினை எடுத்து அதில் 7-8 கப் தண்ணீரை கொதிக்கவிடவும். கொதிக்க ஆரம்பித்ததும், நூடுல்சை உடையாமல் சேர்க்கவும்.
  2. நூடுல்சை 4-5 நிமிடங்கள் வேகவைத்து, அதன்பின்னர் வடிக்கட்டி ஓடும் நீரில் கழுவவும்.
  3. 1 தேக்கரண்டி எண்ணெயை நூடுல்சில் சேர்த்து கலந்துகொள்க. அப்போதுதான் ஒட்டாது. நூடுல்சை எடுத்துவைத்துக்கொள்ளவும்.
  4. அடுத்து ஒரு வானலியை/கடாயை எடுத்து 2 தேக்கரண்டி எண்ணெயைச் சூடுபடுத்துக. துருவிய பூண்டைச் சேர்த்து அதன் வாசனை எண்ணெயோடு கலக்கட்டும்.
  5. பூண்டை பொன்னிறமாக மாறும்வரையிலும் அதன் அடர் வாசனை அறையை நிரப்பும் வரையிலும் வறுக்கவும்.
  6. வெங்காயம், கேரட், முட்டைக்கோஸ், பசலிக்கீரை சேர்த்து உயர் தீயில் 4-5 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  7. காய்கறிகளின் கடிக்கும் பதத்தில் இருக்கவேண்டும். இது இந்த உணவுக்கு அவசியம்.
  8. அடுத்து நூடுல்சைப் போட்டு வெனிகர், சோயா சாஸ், மிளகு, உப்புடன் கலக்கவும். உயர் தீயில் மேலும் 2-3 நிமிடங்கள் வேகட்டும்.
  9. தக்காளி கெச்சப்போடு சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்