ஆரஞ்சு நறுமணம் சேர்க்கப்பட்ட உலர் பழ ஷாகி புலாவ் | Orange scented Dry fruits Shahi Pulao in Tamil

எழுதியவர் Sanjeeta KK  |  12th Aug 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Orange scented Dry fruits Shahi Pulao by Sanjeeta KK at BetterButter
ஆரஞ்சு நறுமணம் சேர்க்கப்பட்ட உலர் பழ ஷாகி புலாவ்Sanjeeta KK
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

1044

0

ஆரஞ்சு நறுமணம் சேர்க்கப்பட்ட உலர் பழ ஷாகி புலாவ் recipe

ஆரஞ்சு நறுமணம் சேர்க்கப்பட்ட உலர் பழ ஷாகி புலாவ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Orange scented Dry fruits Shahi Pulao in Tamil )

 • 1 கப் பாஸ்மதி அரிசி
 • 1 கப் ஆரஞ்சு சாறு
 • 1 கப் வெந்நீர்
 • 1/2 கப் பலதரப்பட்ட கொட்டைகளும் பழங்களும்
 • 1 வெங்காயம்
 • 2 தேக்கரண்டி நெய் அல்லது ஆலிவ் எண்ணெய்
 • 1 தேக்கரண்டி இஞ்சித் துருவல்
 • 3 பூண்டு பற்கள்
 • 3 பச்சை மிளகாய்
 • 2 தேக்கரண்டி சூடான பால்
 • 4-5 குங்குமப்பூத் தாள்கள்
 • 1 தேக்கரண்டி சர்க்கரை
 • 1 தேக்கரண்டி ஆரஞ்சுத் தோல்
 • கொஞ்சம் புதினா இலைகள்
 • சுவைக்கேற்ற உப்பு
 • மசாலாக்கள்:-2 கிராம்புகள்
 • 2 பச்சை ஏலக்காய்
 • 1 நட்சத்திர சோம்பு
 • 1 சிறிய பிரிஞ்சு இலை

ஆரஞ்சு நறுமணம் சேர்க்கப்பட்ட உலர் பழ ஷாகி புலாவ் செய்வது எப்படி | How to make Orange scented Dry fruits Shahi Pulao in Tamil

 1. பாஸ்மதி அரிசியைக் சுத்தமானத் தண்ணீரில் கழுவி 20 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் ஊறவைக்கவும்.
 2. சூடானப் பாலில் 10 நிமிடங்களுக்கு குங்குமப்பூவை ஊறவைக்கவும்.
 3. வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி இஞ்சியைத் துருவிக்கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாகப் பிளந்துகொள்க.
 4. ஆரஞ்சுத் தேலைச் சீவி ஒரு கப்பில் பிழிந்து சாறை எடுத்துக்கொள்க.
 5. நெய் அல்லது ஆலிவ் எண்ணெயை ஒரு பெரிய வானலியில் அல்லது கடாயில் சூடுபடுத்தி துரிதமாக முந்திரி பருப்புகளையும் பாதாம் பருப்புகளையும் ஒரு நிமிடம் வறுத்து ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
 6. கிராம்பு, ஏலக்காய், நட்சத்திர சோம்பு, பிரிஞ்சு இலை ஆகியவற்றை அதே எண்ணெயில் சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.
 7. நறுக்கப்பட்ட இஞ்சி, நறுக்கப்பட்ட பூண்டு, பிளக்கப்பட்ட பச்சை மிளகாய் ஆகியவற்றை மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.
 8. அரிசியிலிருந்து தண்ணீரை வடிக்கட்டி, அரிசி, உலர் திராட்சை, சர்க்கரை, உப்பு ஆகியவற்றை வானலியில் போட்டு சற்றே கலக்கிக்கொள்ளவும், ஒவ்வொரு தானியத்தையும் நெய் அல்லது எண்ணெய் பூசப்படுவதற்காக.
 9. சூடான தண்ணீரையும் ஆரஞ்சு சாறையும் ஒரு வானலியில் ஊற்றி, ஒரு மூடியால் மூடி மிதமானச் சூட்டில் 7-8 நிமிடங்கள் வேகவைக்கவும்.
 10. வறுத்த முந்திரி பருப்புகள், பாதாம் மற்றும் பாலில் ஊறவைத்த குங்குமப்பூவையும் சேர்த்து, சற்றே கலக்கி மீண்டும் மூடவும்.
 11. மேலும் 2-3 நிமிடங்கள் அல்லது அரிசி வெந்து தண்ணீர் முற்றிலுமாக உறிஞ்சப்படும்வரை வேகவைக்கவும்.
 12. நறுக்கிய புதினா இலைகள், அன்னாசித் துண்டுகள், துருவப்பட்ட ஆரஞ்சுத் தோல் ஆகியவற்றால் அலங்கரிக்கவும்.
 13. இந்த நறுமணம் மிக்கப் புலாவை தயிர் ரைத்தா அல்லது இந்திய சட்னி எதனோடாவது பரிமாறவும்.

எனது டிப்:

நீங்கள் விரும்பினால் ஆரஞ்சு சாறுக்குப் பதிலாக சாதாரணத் தண்ணீரை சேர்த்துக்கொள்ளவும்.

Reviews for Orange scented Dry fruits Shahi Pulao in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.