வீடு / சமையல் குறிப்பு / கோழி மற்றும் நிலக்கடலை சாஸ்

Photo of Chicken on stick with peanut sauce by Vins Raj at BetterButter
667
2
0.0(0)
0

கோழி மற்றும் நிலக்கடலை சாஸ்

Jun-19-2018
Vins Raj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கோழி மற்றும் நிலக்கடலை சாஸ் செய்முறை பற்றி

பார்பிகியூ இல்லாமல் சாடே போல ஒரு எளிய செய்முறை கொண்ட ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • பான் ஆசியன்
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 300 கிராம் எலும்பில்லாத சிறுத் துண்டுகளாக வெட்டிய கோழி
  2. 1 தேக்கரண்டி இனிப்பு சோயா சாஸ்
  3. 3 கூர்முனை மூங்கில் குச்சிகள்
  4. 2 மேசைக்கரண்டி சமையல் எண்ணெய்
  5. சாஸுக்குதேவையானவை
  6. 1/4 கப் நிலக்கடலை
  7. 1 தேக்கரண்டி புளி பேஸ்ட்
  8. 4 சின்ன வெங்காயம்
  9. 1 மேசைக்கரண்டி தேங்காய் க்ரீம்
  10. 1/2 இன்ச் அளவு இஞ்சி துண்டு
  11. 3 பூண்டு பல்
  12. 4 சிவப்பு மிளகாய்
  13. 2 மேசைக்கரண்டி பனைவெல்லம்
  14. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  15. 1 தேக்கரண்டி சமையல் எண்ணெய்
  16. 1/4 உப்பு

வழிமுறைகள்

  1. நிலக்கடலையை எண்ணெய் இல்லாமல் வறுக்க வேண்டும். வறுத்தவுடன் ஆறவிட்டுத் தோல் நீக்கவும். பின்னு உரலில் இடிக்கவும். கொரகொரப்பாக இருக்க வேண்டும் .
  2. ஒரு மிக்ஸில் ஜாரில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, மஞ்சள் தூள், சிகப்பு மிளகாய் ஒன்றாகச் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்துக்கொள்ளவும்.
  3. வாணலியில் 1 மேஜைக்கரண்டி எண்ணெய்யை சூடாக்கி அதில் அரைத்து வைத்துள்ள விழுதை மற்றும் உப்பைச் சேர்த்து 2 நிமிடங்களுக்கு வறுக்கவும்.
  4. பின்பு புளி பேஸ்ட், தேங்காய் கிரீம், பொடித்த நிலக்கடலை, பனை வெல்லத்தைச் சேர்த்து 4 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க விடவும். சற்று கட்டியாக இருக்க வேண்டும். அடுப்பிலிருந்து தனியே எடுத்து வைக்கவும்.
  5. ஒரு வாணலியில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு கோழி துண்டுகளை 4 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வறுக்கவும். பின்பு சாயா சாஸ் விட்டு நன்றாகக் கிளறி இறக்கி விடவும்.
  6. கோழி துண்டுகளை மூங்கில் குச்சிகளில் சொருகிவிடவும். கோழி குழிகளை நிலக்கடலை சாசுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்