வீடு / சமையல் குறிப்பு / தேங்காய்ப்பால் சாதம்

Photo of Thenkai Pal Sadham or Coconut Milk Pulav by Priya Mani at BetterButter
2387
80
4.3(0)
0

தேங்காய்ப்பால் சாதம்

May-17-2016
Priya Mani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாஸ்மதி அரிசி 2 கப்
  2. தேங்காய் பால் 4 கப் (1:2 விகிதம்)
  3. சுவைக்கேற்ற அளவு உப்பும் மிளகும்
  4. மெலிதாக நறுக்கப்பட்ட வெங்காயம் 2
  5. புதினாவும் கொத்துமல்லியும் - ஒரு கொத்து (நறுக்கப்பட்டது)
  6. சீரகம் 1/2 தேக்கரண்டி
  7. பிளக்கப்பட்ட பச்சை மிளகாய் 4
  8. இஞ்சிப் பூண்டு விழுது 1 தேக்கரண்டி
  9. வெண்ணெய் /நெய் 2 தேக்கரண்டி
  10. முழு கரம் மசாலா : ஒவ்வொன்றும் 2
  11. முந்திரி பருப்பு 1/2 கப்

வழிமுறைகள்

  1. அரிசியை தேங்காய்ப்பாலில் ஊறவைக்கவும். ஒரு கப் அரிசிக்கு 2 கப் தேங்காய் பால், ஒரு மணி நேரத்திற்கு.
  2. ஒரு கு்ககரில், வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து உருகவிட்டு, முழு கரம் மசாலா சேர்த்து வறுத்துக்கொள்ளவும். சீரகம் அதைத் தொடர்ந்து வெங்காயம் சேர்த்து வெங்காயம் வெளுக்கும் வரை வதக்கவும்.
  3. இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும். பிளக்கப்பட்ட பச்சை மிளகாய், புதினா, கொத்துமல்லி இலைகளைச் சேர்த்து நன்றாகக் காலக்கவும்.
  4. ஊறவைத்த அரிசியைச் சேர்க்கவும். அரிசிக்கு கூடுதல் தண்ணிர் தேவையில்லை. வதக்கியக் கலவையோது நன்றாகக் கலந்துகொள்ளவும். தேவையான உப்பு மிளகு சேர்த்துக்கொள்ளவும்.
  5. இறுதியாக 1 தேக்கரண்டி நெய் விட்டு கலந்துகொள்ளவும். மூடிபோட்டி 2 விசில்களுக்கு 5 நிமிடங்கள் சிம்மில் வைத்து அடுப்பை நிறுத்தவும்.
  6. பிரஷர் முழுமையாக வெளியேற அனுமதிக்கவும். அரிசியை உடைக்காமல் மெதுவாக கலக்கி, ஒரு பெரிய பாத்திரத்திற்கு மாற்றி அறையின் வெப்பத்தில் ஆறவிடவும். அப்போதுதான் ஒட்டாது.
  7. புதிதாக நறுக்கப்பட்ட கொத்துமல்லி இலைகளால் அலங்கரித்து, எந்த ரைத்தாவோடும் அல்லது உங்களுக்குப் பிடித்த காரசாரமானக் குழம்போடும் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்