வீடு / சமையல் குறிப்பு / பனீர் கட்லட்

Photo of Paneer cutlet by jeyaveni chinniah at BetterButter
368
4
0.0(0)
0

பனீர் கட்லட்

Jun-19-2018
jeyaveni chinniah
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பனீர் கட்லட் செய்முறை பற்றி

மொறுமொறுப்பான சுவையான கட்லட். குழந்தைகளும் விருப்பமாக சாப்பிடுவார்கள். கண்டிப்பாக செய்து சுவைத்து பாருங்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பனீர் -100கி
  2. உருளை கிழங்கு-1
  3. கேரட் -1/2 கப் பொடியாக நறுக்கியது
  4. குடைமிளகாய்- 1 டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கியது
  5. முட்டை கோஸ்- 1/2 கப் பொடியாக நறுக்கியது
  6. வெங்காயம்-1 பொடியாக நறுக்கியது
  7. கொத்தமல்லி தழை - 1/2 கப் பொடியாக நறுக்கியது
  8. கரம் மசாலா-1 ஸ்பூன்
  9. இஞ்சி - 1 ஸ்பூன் பொடியாக நறுக்கியது
  10. சாட் மசாலா-1/2 ஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு
  12. எண்ணெய் பொரிப்பதற்கு
  13. கடலைமாவு-2 டேபிள்ஸ்பூன்
  14. சோள மாவு-1 ஸ்பூன்
  15. ப்ரெட் க்ரம்ஸ் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பனீரை துருவி ஒரு காட்டன் துணியில் வைத்து நன்கு ஈரத்தன்மை போகும் வரை அதன் மீது கனமான பொருளை வைக்கவும்
  2. பொடியாக நறுக்கிய இஞ்சி, வெங்காயம் ,பச்சை மிளகாய் ,கேரட், குடைமிளகாய் ,முட்டை கோஸ் ஆகியவற்றை வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு 5 நிமிடம் வதக்கவும்
  3. உருளை கிழங்கை வேக வைத்து நன்கு மசித்து கொள்ளவும்
  4. பனீருடன் மசித்த உருளைக்கிழங்கு,வதக்கிய காய்கறிகள் ,கொத்தமல்லி தழை, உப்பு ,சோளமாவு ,கரம் மசாலா ,சாட் மசாலா சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
  5. இதனை வேண்டிய வடிவத்தில் தட்டி கொள்ளவும்
  6. கடலை மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்
  7. தட்டி வைத்துள்ள கட்லட் கலவையை கடலை மாவில் தோய்த்து பிரட் தூளில் பிரட்டவும்
  8. வாணலியில் எண்ணெய் நன்றாக காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  9. மயோனிஸ் மற்றும் தக்காளி சாஸ் உடன் சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்