வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு வெண்டைக்கய் மண்டி/ செட்டிநாடு வெண்டைக்காய் குழம்பு

Photo of Chettinad Vendakkai Mandi/Chettinad Lady Finger Curry by Priya Suresh at BetterButter
6402
112
4.2(1)
0

செட்டிநாடு வெண்டைக்கய் மண்டி/ செட்டிநாடு வெண்டைக்காய் குழம்பு

May-17-2016
Priya Suresh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 10 எண்ணிக்கை வெண்டைக்காய் ( நடுத்தர அளவாக நறுக்கப்பட்டது)
  2. 2 எண்ணிக்கை வெங்காயம் (நறுக்கப்பட்டது)
  3. 1 எண்ணிக்கை தக்காளி (நறுக்கப்பட்டது)
  4. 6 எண்ணிக்கை பூண்டு பற்கள்
  5. 2 எண்ணிக்கை பச்சை மிளகாய் (பிளக்கப்பட்டது)
  6. 3 கப் அரிசி கழுவியத் தண்ணீர்
  7. 1/2 கப் புளித் தண்ணீர்
  8. 3 எண்ணிக்கை வெயிலில் காயவைத்த மாங்காய்
  9. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  10. 1 தேக்கரண்டி கடுகு
  11. 1/2 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு
  12. 2 எண்ணிக்கை காய்ந்த மிளகாய்
  13. கொஞ்சம் கறிவேப்பிலை
  14. சுவைக்கேற்ற உப்பு
  15. தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. மா வத்தலை வெந்நீரில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். எண்ணெயைச் சூடுபடுத்தி கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுக்கவும்.
  2. கடுகு பொறிய ஆரம்பித்ததும், நறுக்கப்பட்ட வெங்காயம், பூண்டு, நறுக்கப்பட்ட தக்காளி ஆகியவற்றை சிறிது நேரம் வதக்கிக்கொள்ளவும். இப்போது வெண்டைகாய்த் துண்டுகளைச் சேர்த்து எல்லாவற்றையும் மேலும் சிறிது நிமிடம் வதக்கவும்.
  3. இறுதியாக நறுக்கப்பட்ட தக்காளி, கறிவேப்பிலை, நறுக்கப்பட்ட பச்சை மிளகாய், மஞ்சள் தூள் ஆகியவற்றை மேலும் சிறிது நேரம் எல்லாவற்றையும் வேகவைக்கவும். அரிசி கழுவியத் தண்ணீரைச் சேர்த்து, மா வத்தல் துண்டுகள், உப்பு சேர்த்து கொதி நிலைக்குக் கொண்டுவரவும்.
  4. இப்போது புளித்தண்ணீர் சேர்த்து எல்லாவற்றையும் நடுத்தரத் தீயில் காய்கறிகள் நன்றாக வேகும்வரை வேகவைக்கவும். குழம்பு தண்ணீராகவோ மிக அடர்த்தியாகவோ இருக்கக்கூடாது. சாதத்தோடும் அப்பளத்தோடு சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ramalingam Narayanasamy
Apr-15-2019
Ramalingam Narayanasamy   Apr-15-2019

Excellent

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்