வீடு / சமையல் குறிப்பு / Banana flower kurma

Photo of Banana flower kurma by Nancy Samson at BetterButter
0
2
5(1)
0

Banana flower kurma

Jun-21-2018
Nancy Samson
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • తేలికైనవి
 • ఫరంగివాడు
 • ప్రధాన వంటకం
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. வாழைப்பூ - 1
 2. நறுக்கிய வெங்காயம்- 1 கப்
 3. நறுக்கிய தக்காளி - 1 கப்
 4. கீறிய பச்சை மிளகாய் - 2
 5. இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
 6. பட்டை -1
 7. பிரிஞ்சு இலை - 1
 8. லவங்கம்-4
 9. ஏலக்காய்- 1
 10. கல் பாசி - 1
 11. சீரகம் - 1 தேக்கரண்டி
 12. சோம்பு - 1/2 தேக்கரண்டி
 13. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
 14. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
 15. தனியா தூள் - 2 தேக்கரண்டி
 16. தேங்காய் - 1 கப்
 17. கசகசா - 1 தேக்கரண்டி
 18. முந்திரி - 5
 19. எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
 20. கறிவேப்பிலை - 1 கீற்று

வழிமுறைகள்

 1. வாழைப்பூவை சுத்தம் செய்து மோரில் ஊறவைக்கவும்.
 2. மிக்ஸியில் தேங்காய், கசகசா, முந்திரி, சோம்பு சிறிது நீர் சேர்த்து விழுதாக அரைத்து தனியே வைக்கவும்.
 3. கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், முழு கரம் மசாலா , சீரகம் சேர்க்கவும்.
 4. சீரகம் பொரிந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
 5. வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
 6. பச்சை வாசனை போனதும், தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
 7. சுத்தம் செய்த வாழைப்பூவை சேர்த்து வதக்கவும்.
 8. இதில் மசாலா தூள் அனைத்தும் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்கு வதக்கவும்.
 9. மசாலா வெந்ததும், என்னை பிரிந்து வரும் பதத்தில், தேங்காய் கலவையை சேர்த்து, தேவையான நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
 10. குருமா பதம் வந்ததும் நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும் .
 11. இது என் இணைய சகோதரியின் ரெசிபி. சிறிது மாற்றங்களுடன் செய்துள்ளேன்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Muthulakshmi Madhavakrishnan
Jun-21-2018
Muthulakshmi Madhavakrishnan   Jun-21-2018

வித்தியாசமான குருமா. பார்க்கவே அழகாக உள்ளது.

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்