இஞ்சி மரப்பா/ இஞ்சி மிட்டாய் | Inji Marappa / Candied Ginger in Tamil

எழுதியவர் Sandhya Ramakrishnan  |  19th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Inji Marappa / Candied Ginger by Sandhya Ramakrishnan at BetterButter
இஞ்சி மரப்பா/ இஞ்சி மிட்டாய்Sandhya Ramakrishnan
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  20

  மக்கள்

37

0

இஞ்சி மரப்பா/ இஞ்சி மிட்டாய் recipe

இஞ்சி மரப்பா/ இஞ்சி மிட்டாய் தேவையான பொருட்கள் ( Ingredients to make Inji Marappa / Candied Ginger in Tamil )

 • அனைத்துக்குமான மாவு – கிட்டத்தட்ட 3 தேக்கரண்டி
 • சர்க்கரை – 1 ¼ கப்
 • இஞ்சி – 150 கிராம் (பிஞ்சு இஞ்சி வேர்களைத் தேர்ந்தெடுக்கவும்)

இஞ்சி மரப்பா/ இஞ்சி மிட்டாய் செய்வது எப்படி | How to make Inji Marappa / Candied Ginger in Tamil

 1. இஞ்சியை நன்றாகச் சுத்தப்படுத்தி தோலைச் சீவி எடுத்துவிடவும். இஞ்சியை 1 இன்ச் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
 2. அதன்பிறகு அரை கப் தண்ணீர் பயன்படுத்தி இஞ்சியை மென்மையானச் சாந்தாக அரைத்துக்கொள்க. நுண்ணிய சல்லடை உடைய வடிக்கட்டியைப் பயன்படுத்தி இஞ்சியிலிருந்து சாறைப் பிழிந்துகொள்ளவும்.
 3. கிட்டத்தட்ட ¼ அதிகமான கப் அளவு தண்ணீர் பயன்படுத்தி மீண்டும் இஞ்சிக் கட்டிகளை அரைத்து மீண்டும் சாறு பிழிந்துகொள்ளவும். இஞ்சியை நன்றாகப் பிழிந்துகொள்ளவும், எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாறை பிழிந்துகொள்ளவும். கட்டிப் பகுதிகளை ஒதுக்கிவிடவும்.
 4. வடிக்கட்டிய சாறை கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கு எதுவும் செய்யாமல் விட்டுவைக்கவும்.
 5. இப்போது சாறை மெதுவாக இன்னொரு பாத்திரத்தில் ஊற்றிக்கொள்ளவும். அடியில் அடர்த்தியான வெள்ளைநிறத்தில் படிமத்தை காண்பீர்கள். அதைப் பயன்படுத்தாதீர், சாறை மட்டும் பயன்படுத்தவும்.
 6. ஒரு கடாயில், இஞ்சிச் சாறுடன் சர்க்கரையைச் சேர்த்து சூடுபடுத்தவும். மெல்ல கொதிக்கட்டும். சர்க்கரை பாது ஒரு இரட்டைக் கம்பி பதத்திற்கு வரும்வரை கலவையைச் சூடுபடுத்திக்கொண்டே இருக்கவும்.
 7. உங்கள் ஆட்காட்டி மற்றும் கட்டை விரலால் நீங்கள் தொட்டால் இரண்டு விரல்களுக்கிடையில் இரண்டு நூல்போல் ஆகவேண்டும் என்று பொருள். மிட்டாயின் தன்மையை அது தீர்மானிப்பதால், ஒரு கம்பிக்கு மேல் வருவதை உறுதிசெய்யவும்.
 8. இப்போது மாவை சர்க்கரைப் பாகில்சேர்த்து கட்டி சேராமல் நன்றாகக் கலக்கவும். இப்போது ஒரு நிமிடம் வேகவைக்கவும், நன்றாகக் கிண்டவும், பிறகு அடுப்பை நிறுத்தவும்.
 9. ஒரு தட்டில் நெய் தடவி கலவையை அதில் ஊற்றவும். சில நிமிடங்களுக்கு எடுத்து வைக்கவும், பாதியளவு உலர்ந்துவிட்டால் கூர்மையான கத்தியால் மிட்டாயை வெட்டிக்கொள்ளவும். நீங்கள் அப்படிச் செய்யாவிட்டா, இன்னும் சூடாக இருக்கும்போது மிகவும் கடினமாகிவிடும்.
 10. முழுமையான ஆறடவிட்டு அதன்பிறகு தட்டில் இருந்து மிட்டாயை எடுத்து, காற்றுபுகாத பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும்.

Reviews for Inji Marappa / Candied Ginger in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.