வீடு / சமையல் குறிப்பு / தலப்பாகட்டி பிரியாணி

Photo of Thalapakatti briyani by Revathi Reva at BetterButter
153
2
0.0(0)
0

தலப்பாகட்டி பிரியாணி

Jun-21-2018
Revathi Reva
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தலப்பாகட்டி பிரியாணி செய்முறை பற்றி

சீரகசம்பா அரிசியில் செய்யும் சுவையான பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சீரகசம்பா அரிசி 3/4 கிலோ
  2. சிக்கன் 3/4 கிலோ
  3. பெரிய வெங்காயம் 1
  4. தக்காளி 1
  5. சின்ன வெங்காயம் 150கிராம்
  6. பச்சைமிளகாய் 4
  7. பூண்டு 50கிராம்
  8. இஞ்சி 50கிராம்
  9. புதினா ஒரு கட்டு
  10. கொத்தமல்லி 1 கைப்பிடி
  11. தயிர் 1/2 கப்
  12. எலுமிச்சை பழம் 1
  13. மிளகாய்தூள் 2 ஸ்பூன்
  14. அன்னாசிப்பூ 3
  15. இலவங்கப்பட்டை 4
  16. பிரிஞ்சி இலை 2
  17. மராத்தி மொக்கு 2
  18. மிளகு 2
  19. சோம்பு 2+2 ஸ்பூன்
  20. எண்ணெய்
  21. உப்பு

வழிமுறைகள்

  1. அரிசியை அளந்து ஊற வைக்கவும். சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, புதினா சிறிது, பச்சைமிளகாய் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.
  2. பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சிஇலை,மராத்தி மொக்கு, அன்னாசிப்பூ, மிளகு, சோம்பு 2 ஸ்பூன், மிளகாய்தூள், உப்பு சேர்த்து நன்கு பொடித்து கொள்ளவும்
  3. பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அரைத்த சின்ன வெங்காயமும் சேர்த்து வதக்கவும். புதினா கொத்தமல்லி சிறிது சேர்த்து வதக்கவும்
  4. பொடித்த மசாலா சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் சிக்கனை சேர்க்கவும். தக்காளி சேர்த்து வதக்கவும். தயிர், நெய், எலுமிச்சை அரைபழம் பிழிந்து நன்கு வதக்கவும்
  5. ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் அளவில் தண்ணீர் சேர்க்கவும். கொதித்ததும் அரிசியை சேர்க்கவும். 5 நிமிடம் முடி வேக விடவும்.
  6. ஒரு முறை திறந்து கலந்து விட்டு புதினா, கொத்தமல்லி, எலுமிச்சை பிழிந்து மூடி 10 நிமிடம் சிம்மில் வைத்து தம் விடவும்.
  7. 10 நிமிடம் கழித்து அடுப்பை அனைத்து. 30 நிமிடம் கழித்து திறக்கவும். எளிமையான தலப்பாகட்டி பிரியாணி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்