உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு மசாலா செயம்

Photo of Chettinadu Masala Seeyam / Masala Cheeyam by Sandhya Ramakrishnan at BetterButter
2662
24
0(0)
0

செட்டிநாடு மசாலா செயம்

May-19-2016
Sandhya Ramakrishnan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • టిఫిన్ వంటకములు
  • తమిళనాడు
  • వేయించేవి
  • భోజనానికి ముందు తినే పతార్థాలు / అపెటైజర్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி – ¾ கப் (நான் சோனா மசூரியைப் பயன்படுத்தினேன்)
  2. இட்லி அரிசி – 1 தேக்கரண்டி
  3. உளுத்தம்பருப்பு/உளுந்து – ¾ கப்
  4. வெங்காயம் – 1 பெரியது (பொடியாக நறுக்கப்பட்டது)
  5. பச்சை மிளகாய் – 4 (பொடியாக நறுக்கப்பட்டது)
  6. கறிவேப்பிலை – கொஞ்சம்
  7. எண்ணெய் – 1 தேக்கரண்டியோடு கூடுதலாக நன்றாகப் பொரிப்பதற்கு
  8. கடுகு - 1 தேக்கரண்டி
  9. பெருங்காயம் – ¼ தேக்கரண்டி
  10. உப்பு – சுவைக்கேற்ற அளவு
  11. தேங்காய் – ¼ கப் (துருவல் அல்லது பொடியாக நறுக்கப்பட்ட)

வழிமுறைகள்

  1. பச்சரிசி, இட்லி அரிசி, உளுந்து ஆகியவற்றைக் கழுவி 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. அவற்றை மென்மையான அடர்த்தியானச் சாந்தாக அரைத்துக்கொள்ளவும். மாவை அரைப்பதற்கு எனது கிரைண்டரைப் பயன்படுத்தினேன், பஞ்சுபோன்ற சியத்தைக் கொடுக்கும் பூபோன்ற மாவாக வருவதால்.
  3. ஒரு பிளண்டர்/மிக்சியிலும் நீங்கள் அரைக்கலாம், ஆனால் போதுமானத் தண்ணீரைச் சேர்த்து அடர்த்தியான மாவாக அரைத்துக்கொள்ளவும். தேவையான உப்பை மாவுடன் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  4. இதற்கிடையில், 1 தேக்கரண்டி எண்ணெய்யை ஒரு கடாயில் சூடுபடுத்திக்கொள்ளவும். எண்ணெய் சூடானதும், கடுகு சேர்த்து பொரிக்கவிடவும். இப்போது பெருங்காயம், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை வெங்காயத்துடன் சேர்க்கவும். வெங்காயம் மிருதுவாகும்வரை வதக்கவும்.
  5. இப்போது துருவிய/நறுக்கிய தேங்காயைச் சேர்த்து வேகமாகக் கலக்கவும். தீயை நிறுத்திவிட்டு கலவையை ஆறவிடவும்.
  6. இந்தக் கலவையை அரைத்த மாவுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
  7. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி கையளவு மாவை உருட்டி சூடான எண்ணெயில் விட்டு பொரிக்கவும். ஒரு சமயத்தில் கொஞ்சமாக விடவும். (உங்கள் வானலியின் அளவு எந்தளவு இருக்கிறது என்பதைப் பொறுத்து). உருண்டை பிடிக்க ஈரக்கையைப் பயன்படுத்தி எண்ணெயில் உருண்டையை விடவும். அப்படி உருவாக்குவதற்கு அது எளிமையாக்கும்.
  8. எல்லாப் பக்கங்களும் பொன்னிறமாகும்வரை அவற்றை வறுத்து ஒரு காகிதத் துண்டில் எடுத்துக்கொள்ளவும்.
  9. செட்டிநாடு சிறப்பு கார சட்டினியுடன் சூடாகப் பரிமாறவும்!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்