வீடு / சமையல் குறிப்பு / புளி பொங்கல்

Photo of Tamarind Rice by Pri Darsu at BetterButter
608
1
0.0(0)
0

புளி பொங்கல்

Jun-21-2018
Pri Darsu
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

புளி பொங்கல் செய்முறை பற்றி

புளி சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • இந்திய
  • ஸ்டீமிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சரிசி 1/4 கிலோ
  2. கடுகு 1/2 தேக்கரண்டி
  3. கடலை பருப்பு 1/2 தேக்கரண்டி
  4. இஞ்சி 10கிராம் பொடியாக நறுக்கியது
  5. பெருங்காயத் தூள் 1/4 தேக்கரண்டி
  6. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
  7. புளி 2 நெல்லி அளவு ஊற வைத்தது
  8. உப்பு தேவையான அளவு
  9. மிளகாய் வத்தல் 4
  10. வெந்தயப்பொடி மிக சிறிது
  11. கருவேப்பிலை ஒரு கைப்பிடி
  12. நல்லெண்ணெய் 3 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பச்சரிசியை தண்ணீர் விட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும்
  2. ஊற வைத்த புளியை கையாலேயே வடிகட்டி புளிக்கரைசல் எடுத்து வைக்கவும்
  3. ஒரு அகலமான பாத்திரத்தில் பச்சரிசிக்கு மூன்று மடங்கு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்
  4. 250 பச்சரிசிக்கு 750 தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்
  5. பாத்திரத்தில் தண்ணீர் கொதித்ததும் பச்சரிசியை 2 முறை கழுவி சுத்தம் செய்து போடவும்
  6. அரிசி போட்டவுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு கலந்து கொதிக்கவிடவும்
  7. கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை சிம்மில் வைக்கவும்
  8. அரிசி 90% வெந்தபிறகு
  9. அடுப்பை பற்ற வைத்து கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் கொதித்தவுடன் கடுகு கடலைப்பருப்பு இஞ்சி மிளகாய் வற்றலைக் கிள்ளிப்போட்டு கடுகு வெந்தயம் கறிவேப்பிலை பெருங்காயத்தூள் போட்டு தாழிக்கவும்.
  10. இப்போது புளிக்கரைசல் சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடம் சிம்மில் வைக்கவும்
  11. விரும்பினால் வேர்க்கடலை சேர்த்துக் கொள்ளலாம்
  12. சுவையான புளி பொங்கல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்