மைசூர் மசாலா தோசை | Mysore Masala Dosa in Tamil

எழுதியவர் Lakshmi Vasanth  |  19th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Mysore Masala Dosa by Lakshmi Vasanth at BetterButter
மைசூர் மசாலா தோசைLakshmi Vasanth
  • ஆயத்த நேரம்

    5

    மணிநேரம்
  • சமைக்கும் நேரம்

    60

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

82

0

Video for key ingredients

    மைசூர் மசாலா தோசை recipe

    மைசூர் மசாலா தோசை தேவையான பொருட்கள் ( Ingredients to make Mysore Masala Dosa in Tamil )

    • கறிவேப்பிலை/ கொத்துமல்லி, எண்ணெய் - 1 தேக்கரண்டி
    • சுவைக்கேற்ற உப்பு
    • சர்க்கரை -1 தேக்கரண்டி
    • புளி - 1 தேக்கரண்டி
    • உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
    • கடுகு - 1 தேக்கரண்டி
    • இஞ்சி - 2 தேக்கரண்டி
    • பச்சை மிளகாய் - 5 எண்ணிக்கை
    • வெங்காயம் - 2 எண்ணிக்கை
    • வேகவைத்த உருளைக்கிழங்கு - 4 எண்ணிக்கை
    • மசித்த உருளைக்கிழங்கு
    • சர்க்கரை - 1 தேக்கரண்டி
    • உப்பு - ½ தேக்கரணடி்
    • தேங்காய் - 1 தேக்கரண்டி (விருப்பம் சார்ந்தது)
    • புளி - ஒரு சிறிய துண்டு
    • பூண்டு - 5/6 பற்கள்
    • சர்க்கரை - 1 தேக்கரண்டி
    • உப்பு - ½ தேக்கரண்டி
    • தேங்காய் - 1 தேக்கரண்டி (விருப்பம் சார்ந்தது)
    • புளி - சிறிய துண்டு
    • வெங்காயம் - ½ எண்ணிக்கை
    • பொட்டுக்கடலை - 1 கப்
    • சிவப்பு மிளகாய் - 4-5 எண்ணிக்கை
    • சிவப்பு கார சட்டினி
    • வெந்தயம் - 2 தேக்கரண்டி
    • அவல் - ¾ கப்
    • உளுந்து - 1 கப்
    • அரைவேக்காட்டு அரிசி - 1 கப்
    • பச்சரிசி - 3 கப்
    • தோசை மாவு

    மைசூர் மசாலா தோசை செய்வது எப்படி | How to make Mysore Masala Dosa in Tamil

    1. தோசை மாவு - அரிசியையும் அவலையும் ஒன்றாகவும் உளுந்தைத் தனியாகவும் ஊறவைக்கவும். இப்போது உளுந்தை அரைத்து, பாதி மசிந்ததும் அரிசி அவல் கலவையைச் சேர்த்து ஒன்றாகக் கலந்துகொள்ளவும்.
    2. வழக்கமான நேரத்தைக் காட்டிலும் அதிக நேரம் வேகும். எடுத்து உப்பு சேர்த்து இட்லிக்கும் தோசைக்கும் நாம் செய்வது போல் நொதிக்கவிடவும்.
    3. சட்டினி: ஒரு பிளண்டரில் அடர்த்தியானச் சாந்தாக சிறிது தண்ணீர் ஊற்றி அனைத்துப் பொருள்களையும் அரைத்துக்கொள்ளவும்.
    4. உருளைக்கிழங்கு மசாலா - ஒரு வானலியில் எண்ணெய் எடுத்து கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளவும். வெங்காயம் மென்மையாகும் வரை 2 நிமிடங்களுக்கு வதக்கி, மஞ்சள் தூள் சேர்க்கவும்.
    5. 2 நிமிடங்களுக்கு வதக்கி, இப்போது மசித்த வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்க்கவும். உப்பு, சர்க்கரை, 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும். நன்றாகக் கலந்து கொதிக்கவிடவும். இறுதியாக கொத்துமல்லி சேர்த்து எடுத்து வைத்துக்கொள்ளவும். அது ஒரு அடர்த்தியானக் கலவையாக இருக்கவேண்டும் - பரவவிடக்கூடிய பதத்தில் இருக்கவேண்டும்.
    6. தோசையை வார்ப்பதற்கு - தோசை கல்லில் தோசை மாவை பரவச் செய்து சிறிது நேரம் காத்திருந்து (நமது வழக்கமதான தோசை மாவை விட சற்றே அடர்த்தியாக இருக்கவேண்டும்) கொஞ்சம் எண்ணெய் எல்லாப் பக்கங்களிலும் தெளிக்கவும். பிறகு தோசையின் மீது வெண்ணெய்யைத் தடவவும்.
    7. 1 நிமிடத்திற்கு எதுவும் செய்யாமல் விட்டுவைத்து, பிறகு சிவப்புச் சட்டினியை தோசை மீது தடவி 1 நிமிடத்திற்குக் காத்திருந்து, இப்போது அதன் மீது எல்லா இடத்திலும் உருளைக்கிழங்கு மசாலாவைத் தடவி மீண்டும் 1 நிமிடம் காத்திருந்து எடுத்து பரிமாறவும். தோசையைத் திருப்பிப்போடவேண்டாம்.

    Reviews for Mysore Masala Dosa in tamil (0)

    சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.