வீடு / சமையல் குறிப்பு / மைசூர் மசாலா தோசை

Photo of Mysore Masala Dosa by Lakshmi Vasanth at BetterButter
1275
20
5.0(0)
0

மைசூர் மசாலா தோசை

May-19-2016
Lakshmi Vasanth
300 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • பேசிக் ரெசிப்பி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தோசை மாவு
  2. பச்சரிசி - 3 கப்
  3. அரைவேக்காட்டு அரிசி - 1 கப்
  4. உளுந்து - 1 கப்
  5. அவல் - ¾ கப்
  6. வெந்தயம் - 2 தேக்கரண்டி
  7. சிவப்பு கார சட்டினி
  8. சிவப்பு மிளகாய் - 4-5 எண்ணிக்கை
  9. பொட்டுக்கடலை - 1 கப்
  10. வெங்காயம் - ½ எண்ணிக்கை
  11. புளி - சிறிய துண்டு
  12. தேங்காய் - 1 தேக்கரண்டி (விருப்பம் சார்ந்தது)
  13. உப்பு - ½ தேக்கரண்டி
  14. சர்க்கரை - 1 தேக்கரண்டி
  15. பூண்டு - 5/6 பற்கள்
  16. புளி - ஒரு சிறிய துண்டு
  17. தேங்காய் - 1 தேக்கரண்டி (விருப்பம் சார்ந்தது)
  18. உப்பு - ½ தேக்கரணடி்
  19. சர்க்கரை - 1 தேக்கரண்டி
  20. மசித்த உருளைக்கிழங்கு
  21. வேகவைத்த உருளைக்கிழங்கு - 4 எண்ணிக்கை
  22. வெங்காயம் - 2 எண்ணிக்கை
  23. பச்சை மிளகாய் - 5 எண்ணிக்கை
  24. இஞ்சி - 2 தேக்கரண்டி
  25. கடுகு - 1 தேக்கரண்டி
  26. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  27. புளி - 1 தேக்கரண்டி
  28. சர்க்கரை -1 தேக்கரண்டி
  29. சுவைக்கேற்ற உப்பு
  30. கறிவேப்பிலை/ கொத்துமல்லி, எண்ணெய் - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. தோசை மாவு - அரிசியையும் அவலையும் ஒன்றாகவும் உளுந்தைத் தனியாகவும் ஊறவைக்கவும். இப்போது உளுந்தை அரைத்து, பாதி மசிந்ததும் அரிசி அவல் கலவையைச் சேர்த்து ஒன்றாகக் கலந்துகொள்ளவும்.
  2. வழக்கமான நேரத்தைக் காட்டிலும் அதிக நேரம் வேகும். எடுத்து உப்பு சேர்த்து இட்லிக்கும் தோசைக்கும் நாம் செய்வது போல் நொதிக்கவிடவும்.
  3. சட்டினி: ஒரு பிளண்டரில் அடர்த்தியானச் சாந்தாக சிறிது தண்ணீர் ஊற்றி அனைத்துப் பொருள்களையும் அரைத்துக்கொள்ளவும்.
  4. உருளைக்கிழங்கு மசாலா - ஒரு வானலியில் எண்ணெய் எடுத்து கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளவும். வெங்காயம் மென்மையாகும் வரை 2 நிமிடங்களுக்கு வதக்கி, மஞ்சள் தூள் சேர்க்கவும்.
  5. 2 நிமிடங்களுக்கு வதக்கி, இப்போது மசித்த வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்க்கவும். உப்பு, சர்க்கரை, 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும். நன்றாகக் கலந்து கொதிக்கவிடவும். இறுதியாக கொத்துமல்லி சேர்த்து எடுத்து வைத்துக்கொள்ளவும். அது ஒரு அடர்த்தியானக் கலவையாக இருக்கவேண்டும் - பரவவிடக்கூடிய பதத்தில் இருக்கவேண்டும்.
  6. தோசையை வார்ப்பதற்கு - தோசை கல்லில் தோசை மாவை பரவச் செய்து சிறிது நேரம் காத்திருந்து (நமது வழக்கமதான தோசை மாவை விட சற்றே அடர்த்தியாக இருக்கவேண்டும்) கொஞ்சம் எண்ணெய் எல்லாப் பக்கங்களிலும் தெளிக்கவும். பிறகு தோசையின் மீது வெண்ணெய்யைத் தடவவும்.
  7. 1 நிமிடத்திற்கு எதுவும் செய்யாமல் விட்டுவைத்து, பிறகு சிவப்புச் சட்டினியை தோசை மீது தடவி 1 நிமிடத்திற்குக் காத்திருந்து, இப்போது அதன் மீது எல்லா இடத்திலும் உருளைக்கிழங்கு மசாலாவைத் தடவி மீண்டும் 1 நிமிடம் காத்திருந்து எடுத்து பரிமாறவும். தோசையைத் திருப்பிப்போடவேண்டாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்