வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் பச்சைபயறு எரிசேரி

Photo of Rawbanana Greengram Erissery by Sowmya Sundar at BetterButter
174
1
0.0(0)
0

வாழைக்காய் பச்சைபயறு எரிசேரி

Jun-22-2018
Sowmya Sundar
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் பச்சைபயறு எரிசேரி செய்முறை பற்றி

வாழைக்காய் மற்றும் பச்சை பயறு சேர்த்து செய்த சுவையான சைட் டிஷ் இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கேரளா
  • பிரெஷர் குக்
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைக்காய் - 2
  2. பச்சை பயறு-1/4 கப்
  3. தேங்காய் எண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்
  4. கடுகு -1 டீஸ்பூன்
  5. உளுத்தம்பருப்பு-1 டீஸ்பூன்
  6. மிளகாய் வற்றல்-1
  7. சின்ன வெங்காயம்-2 பொடியாக நறுக்கியது
  8. கறிவேப்பிலை சிறிது
  9. அரைக்க :
  10. தேங்காய் துருவல்-1/4 கப்
  11. சின்ன வெங்காயம்-4
  12. பச்சை மிளகாய்-3
  13. சீரகம்-1 டீஸ்பூன்
  14. மஞ்சள் தூள்-1/4 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பச்சை பயறை ஆறு மணி நேரம் தண்ணீர் விட்டு ஊற வைக்கவும். பின்னர் உப்பு சேர்த்து குக்கரில் குழையாமல் வேக விடவும்
  2. வாழைக்காயை சதுரமாக நறுக்கி சிறிது தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து வேக விடவும்.
  3. மிக்ஸியில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை தண்ணீர் விடாமல் கரகரப்பாக அரைத்த கொள்ளவும்.
  4. வாழைக்காய் வெந்ததும் பச்சை பயறு மற்றும் அரைத்ததை சேர்த்து மசாலாவிற்கு தேவையான அளவு சிறிது உப்பு மட்டும் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விட்டு இறக்கவும்
  5. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல் ,சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்