வீடு / சமையல் குறிப்பு / கருப்பட்டி கேக்

Photo of Palm jaggery cake without oven by Dhibiya Anand at BetterButter
783
2
0.0(0)
0

கருப்பட்டி கேக்

Jun-22-2018
Dhibiya Anand
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கருப்பட்டி கேக் செய்முறை பற்றி

ஹெல்தி ரெசிப்பி

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கோதுமை மாவு ஒரு கப்
  2. கருப்பட்டி பொடித்தது அரை கப்
  3. பால் அரை கப்
  4. எண்ணெய் அல்லது நெய் கால் கப்
  5. கொக்கோ பவுடர் 2 டேபிள் ஸ்பூன்
  6. பேக்கிங் பவுடர் ஒரு டேபிள்ஸ்பூன்
  7. பேக்கிங் சோடா அரை ஸ்பூன்
  8. உப்பு சிறிதளவு
  9. வாழைப்பழம் ஒன்று
  10. வெனிலா எசன்ஸ் 2 டேபிள் ஸ்பூன்
  11. தண்ணீர் 3 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கோதுமை மாவுடன் பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா கொக்கோ பவுடர் உப்பு அனைத்தையும் சேர்த்து சலித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
  2. குக்கரில் உப்பு சிறிதளவு பரப்பி மிதமான தீயில் வைத்து சூடாக்கவும்
  3. ஒரு மிக்ஸி ஜாரில் வாழைப்பழத்துடன் கருப்பட்டி சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் அரைக்கவும்
  4. பின்பு எண்ணைய் அல்லது நெய் சிறிது சிறிதாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  5. இந்தக் கலவையில் கோதுமை மாவு கலவையை சிறிது சிறிதாக சேர்க்கவும் பாலை நன்றாக சூடு செய்து அதனுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்
  6. இதனுடன் வெனிலா எசன்ஸ் சேர்த்துக் கொள்ளவும்
  7. கேக் ட்ரேயில் வெண்ணெய் அல்லது நெய் தடவி இந்த கலவையை ஊற்றி வைக்கவும் அல்லது muffin cupsல் ஊற்றி வைக்கவும்
  8. குக்கரினுள் ஒரு மெடல் ஸ்டாண்ட் வைத்து அதன் மேல் இந்த கேக் ட்ரே வைத்து விசில் இல்லாமல் மூடி விடவும்
  9. 20 நிமிடங்கள் கழித்து அதனை வெளியில் எடுத்து பரிமாறவும்
  10. கருப்பட்டி கேக் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்