உருளைக்கிழங்கு வறுவல் | Uruzhaikehangu varuval in Tamil

எழுதியவர் Mahi Venugopal  |  19th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Uruzhaikehangu varuval by Mahi Venugopal at BetterButter
உருளைக்கிழங்கு வறுவல்Mahi Venugopal
 • ஆயத்த நேரம்

  30

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

14

0

உருளைக்கிழங்கு வறுவல் recipe

உருளைக்கிழங்கு வறுவல் தேவையான பொருட்கள் ( Ingredients to make Uruzhaikehangu varuval in Tamil )

 • வெங்காயம் - 2 பெரிய அளவு, நன்றாக நறுக்கப்பட்டது
 • தக்காளி - 2 பெரிய அளவு பொடியாக நறுக்கப்பட்டது
 • இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
 • உருளைக்கிழங்க - 4 பெரியது (வேகவைத்து தோலுரிக்கப்பட்டது)
 • மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
 • மல்லித் தூள் - 1 1/2 தேக்கரண்டி
 • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
 • கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
 • கஸ்தூரி வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
 • மல்லி - பொடியாக நறுக்கப்பட்டது 2 தேக்கரண்டி
 • எண்ணெய் - 4 தேக்கரண்டி
 • சுவைக்கேற்ற உப்பு

உருளைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி | How to make Uruzhaikehangu varuval in Tamil

 1. தோலுரிக்கப்பட்ட உருளைக்கிழங்குடன் ஆரம்பிக்கவும். அவற்றை 8 துண்டுகளாக ஒவ்வொன்றையும் நறுக்கிக்கொள்ளவும். அதன்பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை உருளைக்கிழங்குடன் சேர்த்து கைகளால் நன்றாகக் கலந்து எடுத்து வைக்கவும்.
 2. இப்போது ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்ளவும். சூடாக இருக்கும்போது தீயை அடக்கி கஸ்தரி வெந்தயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும். வெங்காயம் சேர்த்து கண்ணாடிபோல் ஆகும்வரை வதக்கவும்.
 3. அதன்பிறகு தக்காளியை வெங்காயத்தோடு மசியும் வரை வதக்கவும். அதன்பிறகு இஞ்சிப் பூண்டு விழுது சேர்க்கவும். மல்லி சேர்க்கவும். அதன்பிறகு எண்ணெய் வெளியேறும்வரை வதக்கவும். இந்த நிலையில் மேரினேட் செய்த உருளைக்கிழங்கைச் சேர்க்கவும். இப்போது கரண்டியால் நன்றாகக் கலந்துகொள்ளவும்.
 4. உணவை சிறு தீயில் வைக்கவும். அவ்வப்போது கலக்கிக்கொள்ளவும். எண்ணெய் பிரியும்வரை காத்திருந்து கரம் மசாலா சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும். கொத்துமல்லியால் அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்.

எனது டிப்:

தயிர் சாதம் எலுமிச்சைச் சாதத்தோடு சாப்பிடலாம்

Reviews for Uruzhaikehangu varuval in tamil (0)