வீடு / சமையல் குறிப்பு / நூக்கல் - முந்திரிபருப்பு மிட்டாய்

Photo of Nokkal - Cashew Nut Candy by Sandhya Ramakrishnan at BetterButter
2877
10
4.7(0)
0

நூக்கல் - முந்திரிபருப்பு மிட்டாய்

May-19-2016
Sandhya Ramakrishnan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முழு முந்திரி பருப்பு – 1 கப் (1 மாகாணி)
  2. சர்க்கரை – 1 கப் ( 1 மாகாணி)
  3. ஏலக்காய் தூள் – ½ தேக்கரண்டி
  4. நெய் – 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. முந்திரி பருப்பை தொகுப்புகளாக நெய்யில் பொன்னிறமாகும்வரை வறுக்கவும். வறுத்த உப்பிடப்படாத முந்திரி பருப்பைப் பயன்படுத்தினேன். அதனால் முந்திரி பருப்பு சூடேறவும் வாசனை வெளிப்படவும் வறுப்பதற்கு கொஞ்சமாக நெய் பயன்படுத்தினேன்.
  2. பச்சை முந்திரி பருப்பை பயன்படுத்தினால், பொன்னிறமாகும்வரை வறுத்துக்கொண்டதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். வறுத்த முந்திரிபருப்பை வடிக்கட்டி எடுத்துவைத்துக்கொள்ளவும், முற்றிலுமாக ஆறும்வரை.
  3. முந்திரி பருப்பு ஆறியதும், சர்க்கரை மூழ்கும் அளவிற்கு மட்டும் போதுமானத் தண்ணீர் சேர்த்து சூடுபடுத்தவும். சர்க்கரையை ஒரு கம்பி பதம் வரும்வரை கொதிக்கவிடவும். உங்கள் விரல்களுக்கிடையில் ஒரு செட்டு பாகை விரிக்கும்போது ஒரு ஒற்றை நூல் வடிவம் பெறும்.
  4. இந்த நிலையில், ஏலக்காய் சேர்க்கவும். அதைத் தொடர்ந்து வறுத்து ஆறவைத்த முந்திரிபருப்பையும் சேர்க்கவும். அடுப்பை நிறுத்தவும்.
  5. ஒரு மர கரண்டியால் (அகப்பையால்) கலவையை மெதுவாக முந்திரி உடைபடாமல் கலக்கிக்கொண்டே இருக்கவும். இந்த நிலை மிகமுக்கியமானது, ஏனெனில் ஆறும்போது இந்த பருப்புகளை பாகு முழுமையாக மொழுகுவதற்கு உதவுவதால்.
  6. நீங்கள் கலக்காமல் விட்டால், சர்க்க கட்டியாகி அடியில் தங்கிவிடும், பருப்புகளின் மீது பாகு பூச்சு கிடைக்காது.
  7. தொடர்ந்து 10 நிமிடங்களுக்கு கலக்கவும், அவற்றால் எல்லா பருப்புகளும் சமமாகச் சர்க்கரையால் மொழுகப்பட்டுவிடும். இப்போது கடாயில் அல்லது ஒரு தட்டில் பருப்புகளைத் தனியே வைத்து முழுமையாக ஆறவிடவும்.
  8. ஒரு காற்றுப் புகாத பாத்திரத்தில் வைத்து மகிழவும்!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்