வீடு / சமையல் குறிப்பு / கம்பு சாக்கோ கேக்

Photo of Bajra Choco cake by Raihanathus Sahdhiyya at BetterButter
269
4
0.0(0)
0

கம்பு சாக்கோ கேக்

Jun-22-2018
Raihanathus Sahdhiyya
12 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கம்பு சாக்கோ கேக் செய்முறை பற்றி

சத்தான சிறு தானிய வகைகளுள் ஒன்றான கம்பு சேர்த்து குழந்தைகளுக்கு பிடித்த வண்ணம் செய்து கொடுத்து மகிழ வைக்கும் அருமையான ரெசிபி இது

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • விஸ்கிங்
  • பேக்கிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கம்பு மாவு : 1/2 கப்
  2. கோதுமை மாவு: 1/2 கப் + 1 தேக்கரண்டி
  3. கோகோ பவுடர்: 4 மேசைக்கரண்டி
  4. பொடித்த சர்க்கரை: 1 கப்
  5. பேக்கிங் பவுடர்: 1 தேக்கரண்டி
  6. முட்டை: 2
  7. வெண்ணெய்: 4 மேசைக்கரண்டி+ 1/2 தேக்கரண்டி
  8. வெண்ணிலா எசன்ஸ்: 1/2 தேக்கரண்டி
  9. பால்: தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. ஒரு வாணலியில் / குக்கரில் (கேஸ்கட்,விசில் போடாமல்) ஸ்டாண்ட் வைத்து மூடி வைத்து 15 நிமிடம் ப்ரி ஹீட் செய்யவும்
  2. முதலில் அனைத்து ட்ரை(dry) பொருட்களையும் சல்லடையில் சலித்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
  3. பிறகு முட்டையை நன்றாக அடித்து அதில் வெண்ணெய் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  4. அதில் கலந்து வைத்துள்ள ட்ரை பொருட்களை சேர்த்து கட்டி விழாமல் நன்றாக கலக்கவும். கேக் கலவை மிகவும் கெட்டியாக இருந்தால் மட்டுமே சிறிதளவு பால் சேர்த்துக் கொள்ளவும்.
  5. கேக் டின்னில் சிறிது வெண்ணெய் தடவி கோதுமை மாவு தூவி டஸ்ட் செய்யவும். அதில் தயாரித்து வைத்துள்ள கலவையை ஊற்றி அதை சூடுபடுத்திய வாணலி/ குக்கரில் வைத்து பேக் செய்யவும். மிதமான தீயில் மட்டுமே வைக்க வேண்டும்.
  6. சுமார் அரை மணி நேரம் கழித்து டூத்பிக் கொண்டு வெந்துவிட்டதாவென்று பார்த்து அடுப்பிலிருந்து இறக்கி கூலிங் ரேக்கில் வைக்கவும்.
  7. சாக்லேட் சிரப்/ கனாசே / நடஸ் தூவி அலங்கரித்து பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்