முள்ளங்கி (மூலி) சாம்பார் | Mooli Sambhar in Tamil

எழுதியவர் Kalpana Vinay  |  19th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Mooli Sambhar  by Kalpana Vinay at BetterButter
முள்ளங்கி (மூலி) சாம்பார்Kalpana Vinay
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

33

0

Video for key ingredients

    முள்ளங்கி (மூலி) சாம்பார் recipe

    முள்ளங்கி (மூலி) சாம்பார் தேவையான பொருட்கள் ( Ingredients to make Mooli Sambhar in Tamil )

    • நாட்டு நெய் - 2 தேக்கரண்டி
    • பச்சை மிளகாய் 1 சிறியது விதைகள் நீக்கப்பட்டது
    • சிவப்பு மிளகாய் 1
    • மஞ்சள் 1/2 தேக்கரண்டி
    • உப்பு 1 தேக்கரண்டி
    • எலுமிச்சை அளவில் புளி
    • சாம்பார் பொடி 2 தேக்கரண்டி
    • வெந்தயம் 6
    • ஒரு சிட்டிகை பெருங்காயம்
    • கறிவேப்பிலை 12
    • கடலை பருப்பு 1/2 தேக்கரண்டி
    • கடுகு 1/2 தேக்கரண்டி
    • தக்காளி 1/2 கப் நறுக்கப்பட்டது
    • வெங்காயம் நறுக்கப்பட்டது 1/4 கப்
    • தண்ணீர் 2 கப்
    • முள்ளங்கி தோலுரிக்கப்பட்டு நறுக்கப்பட்டது 3/4 கப்
    • துவரம் பருப்பு 1/3 கப்

    முள்ளங்கி (மூலி) சாம்பார் செய்வது எப்படி | How to make Mooli Sambhar in Tamil

    1. பருப்பைக் கழுவி, தண்ணீரில் குறைந்தது 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
    2. புளியை 1/4 கப் தண்ணீரில் ஊறவைக்கவும்.
    3. வெந்தயத்தையும் பெருங்காயத்தையும் ஒன்றாக அரைத்துக்கொள்ளவும்.
    4. ஒரு பிரஷர் குக்கரில் 2 கப் தண்ணீரை கொதிக்கவிடவும். நறுக்கப்பட்ட முள்ளங்கியையும் பருப்பையும், உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும். பிரஷர் குக்கரில் 15 நிமிடத்திற்கு சிறு தீயில் வேகவைக்கவும். மூடியைத் திறந்து பிரஷர் குக்கரில் பருப்பை மசிக்கவும்.
    5. ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி நெய் எடுத்துக்கொள்ளவும். கடலைப் பருப்பு கொஞ்சம் சேர்த்து வறுத்துக்கொள்ளவும். கடுகு, கறிவேப்பிலை சேர்க்கவும். நறுக்கப்பட்ட வெங்காயம் சேர்த்து அதை வதக்கிக்கொள்ளவும்.
    6. நறுக்கப்பட்ட தக்காளியை மிருதுவாகும்வரை வேகவைக்கவும்.
    7. புளி சாறை சேர்த்து புளியின் பச்சை வாடை போகும்வரை வேகவைக்கவும்
    8. தக்காளிக் கலவையை பருப்புடன் சேர்த்து வேகவைக்கவும். அடர்த்தியாக இருந்தால் கொஞ்சம் வெந்நீர் சேர்க்கவும்.
    9. இன்னொரு கடாயில் மீதமுள்ள நெய்யைச் சேர்த்து, பெருங்காயம்+ வெந்தயப்பொடியைச் சேர்க்கவும். முழு சிவப்பு மிளகாயை அதனுள் போடவும்.
    10. சிறிது நேரம் கலக்கி பருப்புடன் கலந்துகொள்ளவும்.
    11. முள்ளங்கி சாம்பாரை சாதத்துடன் பரிமாறவும்.

    Reviews for Mooli Sambhar in tamil (0)