வீடு / சமையல் குறிப்பு / சத்தான கோதுமை மார்பிள் கேக்

Photo of Healthy whole wheat marble cake by Raihanathus Sahdhiyya at BetterButter
417
2
0.0(0)
0

சத்தான கோதுமை மார்பிள் கேக்

Jun-23-2018
Raihanathus Sahdhiyya
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சத்தான கோதுமை மார்பிள் கேக் செய்முறை பற்றி

முட்டை மைதா சேர்க்காமல் மிகவும் சத்தான முறையில் கோதுமை மாவு சேர்த்து செய்யப்பட்ட சுவையான கேக்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • விஸ்கிங்
  • பேக்கிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கோதுமை மாவு: 1 1/2 கப்
  2. கெட்டித்தயிர்: 1 கப்
  3. நாட்டு சக்கரை அல்லது பொடித்த வெல்லம்: 1 கப்
  4. கோகோ பவுடர்: 3 மேசைக்கரண்டி
  5. பேக்கிங் பவுடர்: 1 தேக்கரண்டி
  6. பால்: 4 மேசைக்கரண்டி
  7. வெண்ணெய்: 4 மேசைக்கரண்டி + 1/2 தேக்கரண்டி
  8. வென்னிலா எசன்ஸ்: 1/4 தேக்கரண்டி
  9. முந்திரி, பாதாம் பருப்புகள், உலர் திராட்சை : கையளவு

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் பேக்கிங் பவுடரை சலித்து எடுத்து நன்றாக கலந்து கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் தயிர் நாட்டுச்சக்கரை வெண்ணெய் மற்றும் வென்னிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  3. அதில் சலித்து வைத்த கோதுமை மாவையும் பேக்கிங் பவுடரையும் சேர்த்து நன்றாக கட்டியில்லாமல் கலக்கவும்
  4. இறுதியாக தேவைக்கேற்ற அளவு பால் ஊற்றி நன்றாக கலக்கி முந்திரி பாதாம் பருப்பு மற்றும் உலர் திராட்சை சேர்த்து கலக்கவும்
  5. தயாரித்து வைத்துள்ள கலவையை இரண்டாக பிரித்து அதில் ஒரு பகுதியை கோகோ பவுடர் கலந்து நன்றாக கலக்கவும்.
  6. இப்பொழுது கேக் டின்னை எடுத்து அதில் வெண்ணெயைத் தடவி ஒரு கரண்டி கேக் கலவையை நடுப்பகுதியில் ஊற்றவும்
  7. அடுத்து கோகோ கேக் கலவையை ஏற்கனவே ஊற்றிய கலவையின் நடுப்பகுதியில் ஊற்றவும்.
  8. இவ்வாறே அனைத்து மாவையும் மாற்றி மாற்றி ஊற்றி இறுதியானது டூத் பிக் கொண்டு டிசைன் செய்யவும்.
  9. இதை பிரி ஹீட் செய்த அவனில் 35 - 40 நிமிடங்கள் அல்லது வேகும் வரை பேக் செ‌ய்து எடுக்கவும்.
  10. இறுதியாக சாக்லேட் சிரப் ஊற்றி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்