வீடு / சமையல் குறிப்பு / பீன்ஸ் சிரக பொரியல்

Photo of Beans cumin fry by Balajayasri Dhamu at BetterButter
544
1
0.0(0)
0

பீன்ஸ் சிரக பொரியல்

Jun-23-2018
Balajayasri Dhamu
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீன்ஸ் சிரக பொரியல் செய்முறை பற்றி

பீன்ஸ் மற்றும் சிரகம் பயன்படுத்தி செய்வது சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம் சைட் டிஸ் ஆகவும் பயன்படுத்தி கொள்ளலாம்.புரதம் நிறைந்த உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீன்ஸ் 200கிராம்
  2. சீரகம்2ஸ்பூன்
  3. வர மிளகாய்5
  4. தேங்காய்த்துருவல்3தேக்கரண்டி
  5. கடுகு1/2ஸ்பூன்
  6. உளுந்து1/2ஸ்பூன்
  7. கடலைபருப்பு1/2ஸ்பூன்
  8. பெருங்காயத்தூள் சிறிது
  9. எண்ணெய் தேவையான அளவு
  10. மஞ்சள் தூள்1/2தேக்கரண்டி
  11. தேவையான அளவு உப்பு

வழிமுறைகள்

  1. பீன்ஸை நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்
  2. பிறகு பீன்ஸை கட் செய்து வைத்துக் கொள்ளவும்
  3. மிக்ஸியில் சீரகம், வரமிளகாய், தேங்காய் துருவல், மஞ்சள் தூள் அனைத்தும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  4. கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்
  5. வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு உளுந்து கடலை பருப்பு போட்டு தாளித்து பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளவும்
  6. கட் செய்த பீன்சை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்
  7. அதில் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும்
  8. பீன்ஸ் வெந்தவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்
  9. பிறகு அரைத்தவற்றை சேர்த்து நன்கு கிளறவும்
  10. நன்கு வதக்கிக் கொள்ளவும்
  11. இப்போது பீன்ஸ்சிரக பொரியல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்