வீடு / சமையல் குறிப்பு / பச்சைப்பயிறு சப்பாத்தி

Photo of Green gram chapathi by Krishnasamy Vidya Valli at BetterButter
239
2
0.0(0)
0

பச்சைப்பயிறு சப்பாத்தி

Jun-24-2018
Krishnasamy Vidya Valli
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பச்சைப்பயிறு சப்பாத்தி செய்முறை பற்றி

வீட்டில் எளிதில் செய்யும் சத்தான டிபன் வெரைட்டி இது. நோ ஆனியன் நோ கார்லிக் வகையை சேர்ந்தது. ஒருவருக்கு இரண்டு வீதம் நான்கு பேர்களுக்கு கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சை பயறு கால் கப்
  2. கோதுமை மாவு அரை கப்
  3. அரைக்க தேவையானவை
  4. கொத்துமல்லி இலை பொடியாக நறுக்கியது 2 தேக்கரண்டி
  5. பச்சைமிளகாய் 2
  6. இஞ்சி ஒரு சிறிய துண்டு
  7. உப்பு முக்கால் தேக்கரண்டி
  8. பெருங்காயம் கால் தேக்கரண்டி
  9. சப்பாத்தி வாட்டுவதற்கு தேவையான அளவு நெய் அல்லது எண்ணெய்

வழிமுறைகள்

  1. வெறும் கடாயில் பச்சைப் பயறை வறுத்து ஆறவைத்து தண்ணீர் விட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  2. குக்கரில் அளவாக தண்ணீர் விட்டு நன்றாக குழைய வேக வைத்துக் கொள்ளவும்
  3. அரைக்க கொடுத்தவற்றை அரைத்துக் கொள்ளவும்
  4. எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும் தண்ணீர் தேவையில்லை
  5. சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  6. சப்பாத்தியாக இட்டு தோசைக்கல்லில் எண்ணெய் அல்லது நெய் விட்டு வாட்டி எடுக்கவும்
  7. தொட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை விருப்பப்பட்டால் தயிர்/தயிர் சாலட் உடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்