வீடு / சமையல் குறிப்பு / சேப்பங்கிழங்கு வறுவல்

Photo of Chepankezhangu varuval ( or) taro root roast by Mahi Venugopal at BetterButter
294
5
0.0(0)
0

சேப்பங்கிழங்கு வறுவல்

May-20-2016
Mahi Venugopal
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • தினமும்
 • தமிழ்நாடு
 • ஃபிரையிங்
 • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. சேப்பங்கிழங்கு - 24 எண்ணிக்கை
 2. மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
 3. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
 4. பச்சரிசி மாவு - 1 தேக்கரண்டி
 5. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
 6. கடலை மாவு - 1 தேக்கரண்டி
 7. எண்ணெய் - 2 கப்
 8. கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு (கழுவப்பட்டு வடிக்கட்டப்பட்டது)
 9. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

 1. நீங்கள் தேர்ந்தெடுக்க சேப்பங்கிழங்கு முழு வடிவத்தில் இருக்கப் பார்த்துக்கொள்ளவும். அவற்றில் ஓட்டைகளோ அல்லது கூம்பு வடிவமாகவோ இருக்கக்கூடாது.
 2. அடுத்து சுத்தப்படுத்துவது. சமைப்பதற்கு முன் இப்போது அவற்றை தண்ணீரில் 5 நிமிடங்கள் போட்டு வைக்கவும். இது அவற்றில் ஒட்டியுள்ள மண்ணை இலகச்செய்து, கழுவுவதற்கு எளிமையாக்கும்.
 3. சேப்பங்கிழங்கு பாதியளவு மூழ்கும் அளவிற்கு ஒரு பிரஷர் குக்கரில் தண்ணீர் எடுத்து அவற்றில் போடவும். ஒரு விசில் போதும், அதிகமாக வேகவைத்தால் வடிவத்தை இழந்து கூழாகிவிடும்.
 4. தோலை உரித்து, 1/3 இன்ச் அகலத்தில் வட்டவட்டமாக நறுக்கிக்கொள்ளவும். வட்டம் 1 இன்ச் அளவிற்கு விட்டம் கொண்டதாக இருந்தால் பாதியாக வெட்டிக்கொள்ளவும். இல்லையேல் அப்படியே விட்டுவிடவும்.
 5. இதற்கிடையில் வானலியில் எண்ணெய் எடுத்து மிதமானத் தீயில் சூடுபடுத்திக்கொள்ளவும். எண்ணெய் சூடானதும் மேரினேட் செய்யப்பட்ட சேப்பங்கிழங்குடன் நாம் தயாராக இருக்கவேண்டும்.
 6. அகலமானத் திறந்த பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும். மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், பச்சரிசி (உங்கள் வறுவலை மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் மாற்றக்கூடிய இரகசிய பொருள் இது, தவர விட்டுவிடாதீர்கள்), கடலை மாவு, உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். மென்மையான மாவுக்காகக் கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும். வெட்டி வைத்துள்ள சேப்பங்கிழங்கை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு இறுதியாக எல்லாவற்றையும் மாவில் போட்டுக் கலக்கவும். சேப்பங்கிழங்கு சமமான மொழுகப்பட்டுள்ளதை உறுதி செய்துகொள்ளவும்.
 7. இப்போது பொரிப்பதற்கான நேரம். சேப்பங்கிழங்கை ஒன்றன் பின் ஒன்றாக விடவும், 10-15 துண்டுகளுக்கு மேல் போடவேண்டாம். தீயை மிதமானச் சூட்டிலிருந்து அதிகச் சூட்டுக்கு இடையில் பராமரித்து சமமான நிறம் பெற சேப்பங்கிழங்கைத் திருப்பிப் போட்டுக்கொண்டே இருக்கவும்.
 8. அவை பொன்னிறமாக மாறியதும் ஒரு டிஸ்யூ பேப்பரில் எடுத்துக்கொள்ளவும். இறுதியாக வறுத்த சேப்பங்கிழங்குடன் சேர்க்கப்பட்ட கறிவேப்பிலை அற்புதமான வாசனையைத் தரும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்