வீடு / சமையல் குறிப்பு / சத்தான சிவப்பரிசி கருப்புளுந்து கஞ்சி (நோன்பு கஞ்சி பாணியில்)

Photo of Healthy Briwn Rice Black gram Porridge(Ramadan nonbu kanji style) by Raihanathus Sahdhiyya at BetterButter
1023
2
0.0(0)
0

சத்தான சிவப்பரிசி கருப்புளுந்து கஞ்சி (நோன்பு கஞ்சி பாணியில்)

Jun-24-2018
Raihanathus Sahdhiyya
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சத்தான சிவப்பரிசி கருப்புளுந்து கஞ்சி (நோன்பு கஞ்சி பாணியில்) செய்முறை பற்றி

கருப்பு உளுந்து மிகவும் சத்தானது. எண்ணற்ற நலன்கள் கொண்டுள்ள கருப்பு உளுந்து மற்றும் சிவப்பு அரிசி சேர்த்து நோன்பு கஞ்சி பாணியில் சுவையாக செய்த கஞ்சி செய்முறை இதோ!!

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சிவப்பரிசி (மட்டை அரிசி) : 1/3 கப்
  2. கருப்பு உளுந்து: 1/3 கப்
  3. பாசிப்பருப்பு : 1/8 கப்
  4. துவரம் பருப்பு: 1/8 கப்
  5. வெந்தயம்: 1 மேசைக்கரண்டி
  6. பூண்டு: 4-5 பல்
  7. தக்காளி: 1 (அல்லது) 1 1/2
  8. எ‌ண்ணெ‌ய்: தாளிக்க
  9. சீரகம்: 1/2 தேக்கரண்டி
  10. பட்டை 1 துண்டு , கிராம்பு 2, ஏலக்காய் 2
  11. கருவேப்பிலை: 7-8 இலைகள்
  12. சிறிய வெங்காயம்: 5-7
  13. பச்சை மிளகாய்: 2
  14. தேங்காய் துருவல்/ விழுது : 1/8 கப்
  15. உப்பு : தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. முதலில் குக்கரில் சிவப்பரிசி, கருப்பு உளுந்து, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, பூண்டு பல், சிறிதளவு வெந்தயம் மற்றும் பாதி தக்காளி நறுக்கி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
  2. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிதளவு சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து பின்னர் கருவேப்பில்லை, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்நிறமாகும் வரை வதக்கவும்.
  3. பின்னர் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கி பாதி தக்காளி நறுக்கி போட்டு அது சுருளும் வரை வதக்கவும்
  4. தாளித்து வைத்துள்ளவற்றை வேக வைத்துள்ள கஞ்சியில் சேர்த்து தேவையென்றால் தண்ணீர் சேர்த்து அடுப்பில் ஏற்றவும். அதில் தேங்காய் விழுது மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவு‌ம்.
  5. இந்த சத்தான கஞ்சியை சூடாக பரிமாறவும். சதாரண அரிசியில் செய்யும் கஞ்சியை விட சிவப்பு அரிசியில் செய்யும் இக் கஞ்சி மிகவும் சுவையாக இருக்கும்.
  6. கருப்பு உளுந்து இல்லாமலும் நோன்பு கஞ்சி போல் செய்யலாம். இது கருப்பு உளுந்து சேர்க்காமல் செய்தது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்