வீடு / சமையல் குறிப்பு / செர்ரி ரெட் வெல்வெட் கேக்

Photo of Cherry Red Velvet Cake by Sowmya Sundar at BetterButter
567
4
5.0(0)
0

செர்ரி ரெட் வெல்வெட் கேக்

Jun-24-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செர்ரி ரெட் வெல்வெட் கேக் செய்முறை பற்றி

ரெட் வெல்வெட் கேக்கில் செர்ரி டாப்பிங் செய்த அப் சைட் டவுண் கேக் இது. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பேக்கிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. செர்ரி -1 கப்
  2. டெமராரா சுகர்/ ப்ரௌன் சுகர் -3/4 கப்
  3. வெண்ணெய்-3 டேபிள் ஸ்பூன்
  4. மைதா -1 கப்
  5. எண்ணெய்-1/4 கப்
  6. தயிர்-1/4 கப்
  7. பால்-2 டேபிள் ஸ்பூன்
  8. பேக்கிங் பவுடர்-1 டீஸ்பூன்
  9. பேக்கிங் சோடா அரை டீஸ்பூன்
  10. வெனிலா எசன்ஸ் ஒரு டீஸ்பூன்
  11. ரெட் ஃபுட் கலர் ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பேக்கிங் ட்ரேயில் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் தடவி டெமராரா சுகர் இரண்டு டேபிள் ஸ்பூன் தூவி கொள்ளவும். பின் அதன் மேல் விதை எடுத்த இரண்டாக நறுக்கிய செர்ரி பழங்களை நறுக்கிய பாகம் கீழ் நோக்கி உள்ளது போல் அடுக்கி கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் மீதி வெண்ணெய்,எண்ணெய், டெமராரா சுகர், தயிர் ,வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக அடித்து கலந்து கொள்ளவும்.
  3. பின் அதில் சலித்த மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, கொக்கோ பவுடர் மற்றும் ரெட் கலர் சேர்த்து மெதுவாக இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்
  4. செர்ரி அடுக்கிய பேக்கிங் ட்ரேயில் கலந்த மாவை அதன் மேல் விட்டு சமன்படுத்தவும்
  5. ப்ரீ ஹீட் செய்த ஓவனில் 180 டிகிரி சூட்டில் 40 நிமிடம் பேக் செய்யவும்.வெந்து விட்டதா என குச்சியால் நடுவில் குத்தி பார்க்கவும்
  6. ஆறியதும் தட்டில் கேக்கை திருப்பி போட்டு பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்