வாழைப்பூ உசிலி | Banana Flower Usuli in Tamil

எழுதியவர் Krithika Chandrasekaran  |  20th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Banana Flower Usuli by Krithika Chandrasekaran at BetterButter
வாழைப்பூ உசிலிKrithika Chandrasekaran
  • ஆயத்த நேரம்

    30

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

18

0

Video for key ingredients

    வாழைப்பூ உசிலி recipe

    வாழைப்பூ உசிலி தேவையான பொருட்கள் ( Ingredients to make Banana Flower Usuli in Tamil )

    • உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
    • கடுகு - 1 தேக்கரண்டி
    • எண்ணெய் 4ல் இருந்து 5 தேக்கரண்டி
    • சுவைக்கேற்ற உப்பு
    • பெருங்காயத் தூள் - 1/2 தேக்கரண்டி
    • காய்ந்த மிளகாய் - 2
    • கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
    • துவரம் பருப்பு - 1 கப்
    • மோர் - வாழைப்பூவை ஊறைவக்கப் போதுமானது
    • வாழைப்பூ- 1 நடுத்தர அளவிலானது

    வாழைப்பூ உசிலி செய்வது எப்படி | How to make Banana Flower Usuli in Tamil

    1. வாழைப்பூவிலிருந்து பூக்களைப் பிரித்து மத்தியில் உள்ள தண்டை நீக்கவும். பூக்களை நறுக்கி இரவு முழுவதும் மோரில் ஊறவைக்கவும்.
    2. நறுக்கப்பட்ட பூக்களை சுத்தமானத் தண்ணீரில் ஊறவைத்து வடிக்கட்டிக்கொள்ளவும். ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கொஞ்சம் உப்பு சேர்த்து மிருதுவாகும்வரை வேகவைக்கவும்.
    3. துவரம் பருப்பையும் கடலைப் பருப்பையும் கழுவி 30 நிமிடங்களுக்கு வேகவைக்கவும். வடிக்கட்டி ஒரு கொலண்டரிலோ வடிக்கட்டியிலோ விட்டு வைக்கவும்.
    4. ஒரு மிக்சரில், வடிக்கட்டியப் பருப்புகளையும், சிவப்பு மிளகாய், உப்பு, பெருங்காயத்தை அடித்துக்கொள்ளவும். மிகக்குறைவானத் தண்ணீரைப் பயன்படுத்தவும், அதாவது 1-2 தேக்கரண்டிகள். மேலும் அவற்றைக் கரடுமுரடானச் சாந்தாக அரைத்துக்கொள்ளவும். (நுண்ணிய ரவை பதத்திற்கு)
    5. கலவையை இட்லித் தட்டில் பரவவிட்டு, சமமாக வேவதற்கு இடைவெளி விட்டு 15-20 நிமிடங்களுக்கு ஆவியில் வேகவைக்கவும்.
    6. வேகவைத்த பருப்பை எடுத்து அகலாமானத் தட்டில் பரவவிட்டு ஆறவிடவும். அறையின் வெப்பத்திற்கு ஆறியதும் கட்டிப்போகாமல் இருக்கக் கைகளால் கட்டிகளை உடைக்கவும்.
    7. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி உளுத்தம்பருப்பைத் தொடர்ந்து கடுகு சேர்க்கவும். கடு வெடிக்க ஆரம்பித்ததும் வேகவைத்த பருப்பைக் கலந்து எண்ணெய் பருப்புகளை முழுமையாக மொழுகுவதற்கு நன்றாகக் கலக்கி 5ல் இருந்து 7 நிமிடங்கள் சமமாக வேகவைக்கவும். மீண்டும், கட்டிகள் தோன்றுகிறதா என்று பார்க்கவும்.
    8. இப்போது வேகவைத்த வாழைப்பூவை சேர்த்து நன்றாகக் கலக்கவும். உப்பு சரிபார்த்து 4ல் இருந்து 5 நிமிடங்களுக்கு மேல் வேகவைக்கவும். எடுத்து சூடாகப் பரிமாறவும்.

    எனது டிப்:

    வேகவைத்தக் கத்தரிக்காயை மிக்சரில் வேகமாக வைப்பர் பொத்தானைக்கொண்டு 1 துரத ஓட்டங்களைக் கொடுப்பது ஒரு நல்ல தந்திரம், இது வேகவைக்ழும்போது பருப்புக் குவில் ஏற்படுவதை உடைக்க உதவும்.

    Reviews for Banana Flower Usuli in tamil (0)