வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ உசிலி

Photo of Banana Flower Usuli by Krithika Chandrasekaran at BetterButter
1278
5
0.0(0)
0

வாழைப்பூ உசிலி

May-20-2016
Krithika Chandrasekaran
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைப்பூ- 1 நடுத்தர அளவிலானது
  2. மோர் - வாழைப்பூவை ஊறைவக்கப் போதுமானது
  3. துவரம் பருப்பு - 1 கப்
  4. கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
  5. காய்ந்த மிளகாய் - 2
  6. பெருங்காயத் தூள் - 1/2 தேக்கரண்டி
  7. சுவைக்கேற்ற உப்பு
  8. எண்ணெய் 4ல் இருந்து 5 தேக்கரண்டி
  9. கடுகு - 1 தேக்கரண்டி
  10. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. வாழைப்பூவிலிருந்து பூக்களைப் பிரித்து மத்தியில் உள்ள தண்டை நீக்கவும். பூக்களை நறுக்கி இரவு முழுவதும் மோரில் ஊறவைக்கவும்.
  2. நறுக்கப்பட்ட பூக்களை சுத்தமானத் தண்ணீரில் ஊறவைத்து வடிக்கட்டிக்கொள்ளவும். ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கொஞ்சம் உப்பு சேர்த்து மிருதுவாகும்வரை வேகவைக்கவும்.
  3. துவரம் பருப்பையும் கடலைப் பருப்பையும் கழுவி 30 நிமிடங்களுக்கு வேகவைக்கவும். வடிக்கட்டி ஒரு கொலண்டரிலோ வடிக்கட்டியிலோ விட்டு வைக்கவும்.
  4. ஒரு மிக்சரில், வடிக்கட்டியப் பருப்புகளையும், சிவப்பு மிளகாய், உப்பு, பெருங்காயத்தை அடித்துக்கொள்ளவும். மிகக்குறைவானத் தண்ணீரைப் பயன்படுத்தவும், அதாவது 1-2 தேக்கரண்டிகள். மேலும் அவற்றைக் கரடுமுரடானச் சாந்தாக அரைத்துக்கொள்ளவும். (நுண்ணிய ரவை பதத்திற்கு)
  5. கலவையை இட்லித் தட்டில் பரவவிட்டு, சமமாக வேவதற்கு இடைவெளி விட்டு 15-20 நிமிடங்களுக்கு ஆவியில் வேகவைக்கவும்.
  6. வேகவைத்த பருப்பை எடுத்து அகலாமானத் தட்டில் பரவவிட்டு ஆறவிடவும். அறையின் வெப்பத்திற்கு ஆறியதும் கட்டிப்போகாமல் இருக்கக் கைகளால் கட்டிகளை உடைக்கவும்.
  7. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி உளுத்தம்பருப்பைத் தொடர்ந்து கடுகு சேர்க்கவும். கடு வெடிக்க ஆரம்பித்ததும் வேகவைத்த பருப்பைக் கலந்து எண்ணெய் பருப்புகளை முழுமையாக மொழுகுவதற்கு நன்றாகக் கலக்கி 5ல் இருந்து 7 நிமிடங்கள் சமமாக வேகவைக்கவும். மீண்டும், கட்டிகள் தோன்றுகிறதா என்று பார்க்கவும்.
  8. இப்போது வேகவைத்த வாழைப்பூவை சேர்த்து நன்றாகக் கலக்கவும். உப்பு சரிபார்த்து 4ல் இருந்து 5 நிமிடங்களுக்கு மேல் வேகவைக்கவும். எடுத்து சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்