தென்னிந்திர பட்ரா | South Indian Patra in Tamil

எழுதியவர் Krithika Chandrasekaran  |  20th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of South Indian Patra by Krithika Chandrasekaran at BetterButter
தென்னிந்திர பட்ராKrithika Chandrasekaran
 • ஆயத்த நேரம்

  50

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

62

0

தென்னிந்திர பட்ரா recipe

தென்னிந்திர பட்ரா தேவையான பொருட்கள் ( Ingredients to make South Indian Patra in Tamil )

 • காய்ந்த மிளகாய் - 2ல் இருந்து 3
 • சுவைக்கேற்ற உப்பு
 • பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
 • உளுந்து (உடைத்த கருப்பு உளுந்து) - 1 தேக்கரண்டி
 • துவரம்பருப்பு (உடைத்த மஞ்சள் துரவம் பருப்பு) - 1 1/2 கப்
 • சேப்பங்கிழங்கு இலைகள் - 8 நடுத்தர அளவிலானது ( அல்லது 4 பெரியது)

தென்னிந்திர பட்ரா செய்வது எப்படி | How to make South Indian Patra in Tamil

 1. துவரம் பருப்பையும் உளுந்தையும் கழுவி ஒரு மணி நேரத்திற்கு ஊறவைக்கவும். தண்ணீரை வடிக்கட்டிக்கொள்ளவும்.
 2. சேப்பங்கிழங்கு இலைகளை மெதுவாகக் கழுவி ஒரு கவுண்டரில் மேல் பகுதியை கீழாக வைக்கவும். கவனமாகத் தடிமனான தண்டை இலையைக் கிழிக்காமல் வெட்டிக்கொள்ளவும். உடையாமல் இருக்கவேண்டும், எளிதில் மடிப்பதற்குரியதாகவும் இருக்கவேண்டும்.
 3. பருப்புகள், பெருங்காயம், சிவப்பு மிளாகாய், உப்பு ஆகியவற்றை ஒரு பிளண்டரில் சேர்த்துக்கொள்ளவும். கொஞசம் தண்ணீர் விட்டு சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
 4. ஒரு ஆர்பி இலையை (சேப்பங்கிழங்கு இலையை) மேல் பாகத்தைக் கீழாக விரித்து ஒரு கரண்டி சாந்தை அதன் மீது பரவவிடவும். இன்னொரு இலையால் அதை மூடி இதே நடைமுறையைத் தொடரவும். இலைகள் சற்றே பெரியதாக இருநதால் 2 போதுமானது அல்லது 4 நடுத்தர அளவிலானது போதுமானது.
 5. இலைகள் அடுக்கப்பட்டு பூரணத்தைக் கொண்டு நன்றாகச் சேர்க்கப்பட்டது, இறுக்கமான உருளை வடிவத்தில் உருட்டிக்கொள்ளவும்.
 6. ஒரு வேகவைக்கும் பாத்திரத்தைத் தயார் செய்து உருட்டிய இலைகளை வேகவைக்கும் தட்டில் வைக்கவும். 30 நிமிடங்களுக்கு வேகட்டும். எடுத்து ஆறவைக்கவும்.
 7. உருட்டிய இலைகளை 1/2 இன்ச் தடிமன் துண்டுகளாக வெட்டி பரிமாறுவதற்கு முன் மொறுமொறுப்பாகும்வரை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

எனது டிப்:

தென்னிந்திய குழம்பு மற்றும் மிளகு ரசத்தோடு சிறப்பாக இருக்கும்

Reviews for South Indian Patra in tamil (0)