வீடு / சமையல் குறிப்பு / சுட்ட தக்காளி பூண்டு சட்னி

Photo of Smoked Tomato garlic chutney by Menaga Sathia at BetterButter
559
1
0.0(0)
0

சுட்ட தக்காளி பூண்டு சட்னி

Jun-24-2018
Menaga Sathia
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சுட்ட தக்காளி பூண்டு சட்னி செய்முறை பற்றி

இட்லி,தோசைக்கு ஏற்றது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • அக்கம்பனிமென்ட்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தக்காளி -1 பெரியது
  2. பூண்டுப்பல் -1 கப்
  3. காய்ந்தமிளகாய் -20
  4. நல்லெண்ணெய் -1 கப்
  5. உப்பு - தேவைக்கு
  6. புளி - 2 நெல்லிக்காயளவு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காயவைக்கவும்.காய்ந்ததும் அடுப்பை அனைத்துவிட்டு மிளகாயை வறுத்தெடுக்கவும்.
  2. பின் மீண்டும் அதே எண்ணெயை காயவைத்து பூண்டினை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும்.
  3. இப்போது அதே எண்ணெயில் முழு தக்காளியினை போட்டு சீறிதீயில் நன்கு மசிந்து எண்ணெய் பிரியும்வரை வதக்கி ஆறவைக்கவும்.
  4. இப்போது மிக்ஸியில் உப்பு,புளி சேர்த்து வதக்கிய அனைத்து பொருட்களையும் சேர்த்து நீர்விடாமல் மைய அரைக்கவும்.
  5. மீதமான எண்ணெயை சட்னியில் கலந்து பரிமாறவும். 2 வாரம்வரை கெடாமல் இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்