வீடு / சமையல் குறிப்பு / மினி ஆனியன் தோசை

Photo of Mini onion Dosai by Chaitali Anand at BetterButter
1307
12
5.0(0)
0

மினி ஆனியன் தோசை

May-20-2016
Chaitali Anand
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ப்லெண்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தோலில்லா முழு உளுந்து 1 கப்
  2. உடைத்த கோதுமை 2 கப்
  3. வெந்தயம் 1 தேக்கரண்டி
  4. கையளவு அடர்த்தியான அவல்
  5. சுவைக்கேற்ற உப்பு
  6. 2 நடுத்தர அளவுள்ள வெங்காயம்
  7. கொத்துமல்லி இலைகள் 1/2 கப்
  8. தேவையான அளவு எண்ணெய்
  9. தேவையான அளவு தண்ணீர்

வழிமுறைகள்

  1. உளுந்தையும் வெந்தயத்தையும் கழுவு ஊறவைக்கவும்.
  2. வேறொரு பாத்திரத்தில் கையளவு அவலுடன் உடைத்த கோதுமையையும் ஊறவைக்கவும்.
  3. 3-4 மணி நேரங்களுக்குப் பிறகு தேவையான அளவு சிறிது தண்ணீரைச் சேர்த்து ஊறவைத்து வடிக்கட்டிய உளுந்தை அரைத்துக்கொள்ளவும்.
  4. வடிக்கட்டிய உடைத்தக் கோதுமையை அவலுடன் சாந்தாகும்வரை அரைத்துக்கொள்ளவும்.
  5. அரைத்த பருப்பையும் உடைத்தக் கோதுமையையும் நன்றாகக் கலந்துகொள்ளவும். உப்பு சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். மாவு பொங்குவதற்கு இடமுள்ள ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும். பாத்திரத்தை மூடி வெப்பமான இடத்தில் வைக்கவும். இரவு முழுவதும் நொதிக்க விடவும். அல்லது குறைந்தபட்சம் 6-7 மணி நேரங்களுக்கு விட்டு வைக்கவும்.
  6. அடுத்தநாள் உங்கள் மாவு சற்றே மிருதுவாகி பஞ்சுபோல் பொங்கியிருக்கவேண்டும். குமிழ்களும் துவர்ப்பு வாடையும் இருக்கும். ஊற்றும் பதத்திற்கு தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்துக்கொள்ளவும்.
  7. வெங்காயத்தை நறுக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  8. சூடுபடுத்தப்பட்ட தோசைக் கல்லில் இரண்டு கரண்டி மாவை ஊற்றி சற்றே பரவவிடவும்.
  9. நறுக்கிய வெங்காயத்தையும் கொத்துமல்லியையும் மெதுவாகத் தூவி கொஞ்சம் எண்ணெய்யையும் விடவும்.
  10. மேல் பக்கத்திலிருந்து குமிழ்கள் வரத் தொடங்கியதும் மெதுவாகத் தூக்கி தோசைத் திருப்பிப்போடவும்.
  11. வெங்காயம் வேகட்டும், கருக ஆரம்பித்ததும் தோசை பரிமாறுவதற்குத் தயார்.
  12. பொடியோடு அல்லது உங்களுக்குப் பிடித்த சட்டினியோடு பரிமாறவும். அதன்பின் சூடான கப்பா டீ அருந்தவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்