வீடு / சமையல் குறிப்பு / திருநெல்வேலி மட்டன் பிரியாணி

Photo of Tirunelveli Mutton Biryani by jeyaveni chinniah at BetterButter
853
8
0.0(0)
0

திருநெல்வேலி மட்டன் பிரியாணி

Jun-25-2018
jeyaveni chinniah
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

திருநெல்வேலி மட்டன் பிரியாணி செய்முறை பற்றி

சுவையான ஊர் மணம் மாறாத மட்டன் பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சீரகசம்பா அரிசி - 1 1/2 கப்
  2. மட்டன் -1/2 கி
  3. வெங்காயம் -2 நீளவாக்கில் நறுக்கியது
  4. தக்காளி- 1 பெரியது நீளவாக்கில் நறுக்கியது
  5. பச்சை மிளகாய்-1 நீளவாக்கில் நறுக்கியது
  6. புதினா -1 கப்
  7. கொத்தமல்லி தழை-1கப்
  8. மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன்
  9. மிளகாய்த்தூள்-1 ஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. இஞ்சி பூண்டு விழுது-2ஸ்பூன்
  12. பட்டை, கிராம்பு-சிறிதளவு
  13. ஏலக்காய்-3
  14. பிரியாணி இலை-1
  15. ஜாதி பத்திரி-1
  16. பெருஞ்சீரகம்-1ஸ்பூன்
  17. நெய்-1 ஸ்பூன்
  18. தேங்காய் பால்-1 கப் ( optional)

வழிமுறைகள்

  1. சீரகசம்பா அரிசியை 15 நிமிடம் ஊறவைக்கவும்
  2. குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு காய்ந்ததும் பட்டை பெருஞ்சீரகம் கிராம்பு ஏலக்காய்,அண்ணாசி பூ ஜாதிபத்திரி பிரியாணி இலை ஆகியவற்றை சேர்க்கவும்
  3. பின்னர் நீளவாக்கில் பெரிய துண்டுகளாக நறுக்கிய‌ வெங்காயத்தை சேர்த்து பழுப்பு நிறமாக மாறும் வரை வதக்கவும்
  4. இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
  5. மிளகாய் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்
  6. மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
  7. கழுவி சுத்தம் செய்த மட்டனை சேர்த்து நன்றாக வதக்கவும்
  8. இரண்டு கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 7 விசில் வைக்கவும்
  9. மட்டன் வேகவில்லை என்றால் கூடுதலாக வைத்து கொள்ளலாம்
  10. பின்னர் மட்டனை தனியாக எடுத்து விட்டு தண்ணீரை அளவிடவும்
  11. குக்கரில் ஊற வைத்து கழுவிய அரிசியை சேர்க்கவும்
  12. ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் அளவு
  13. வேகவைத்த மட்டன் தண்ணீர் இரண்டு கப் மற்றும் ஒரு கப் தேங்காய் பால் சேர்க்கவும்
  14. உப்பு காரம் தேவையென்றால் சேர்த்து கொள்ளவும்
  15. கொத்தமல்லி தழை புதினா இலை சேர்த்து மிதமான தீயில் 20 நிமிடங்கள் வைக்கவும்
  16. சுவையான திருநெல்வேலி பிரியாணியை சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்