வீடு / சமையல் குறிப்பு / பாலக் கீரை பூரி

Photo of Palak puri by Gayathri Sayeeram at BetterButter
383
2
0.0(0)
0

பாலக் கீரை பூரி

Jun-25-2018
Gayathri Sayeeram
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாலக் கீரை பூரி செய்முறை பற்றி

இந்த ரெசிபியில் உடலுக்கு ஆரோக்கியமான பாலக்கீரையை கொண்டு பூரி செய்துள்ளேன்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு 2 கப்
  2. உப்பு ருசிக்கேற்ப
  3. சர்க்கரை ஒரு டீஸ்பூன்
  4. பாலக்கீரை ஒரு கட்டு
  5. சீரகம் ஒரு டீஸ்பூன்
  6. பச்சைமிளகாய் 2
  7. எண்ணெய் பொரிப்பதற்கு
  8. சோடா உப்பு ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து அதில் பச்சை மிளகாய் பாலக்கீரை ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கவும்
  2. பாலக்கீரை சுருங்கி வதங்கியதும் அடுப்பை அணைக்கவும்
  3. இதை ஆற விட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  4. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு உப்பு சர்க்கரை ஒரு டீஸ்பூன் எண்ணெய் உப்பு அரைத்த விழுது ஆகியவற்றை சேர்த்து கிளறவும்
  5. தேவையான அளவு தண்ணீர் தெளித்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  6. இந்த மாவை ஐந்து நிமிடம் கழித்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பூரி செய்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்