செட்டிநாடு மட்டன் குழம்பு | Chettinad Lamb Curry ( Chettinad Lamb Kuzambhu ) in Tamil

எழுதியவர் Antara Navin  |  20th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Chettinad Lamb Curry ( Chettinad Lamb Kuzambhu ) by Antara Navin at BetterButter
செட்டிநாடு மட்டன் குழம்புAntara Navin
 • ஆயத்த நேரம்

  15

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  75

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

41

0

செட்டிநாடு மட்டன் குழம்பு recipe

செட்டிநாடு மட்டன் குழம்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Chettinad Lamb Curry ( Chettinad Lamb Kuzambhu ) in Tamil )

 • பெருஞ்சீரகம் - 1.5 தேக்கரண்டி
 • தேங்காய் - 1/2 கப் துருவப்பட்டது (1/2 கப் வெதுவெதுப்பானத் தண்ணீரில் ஊறவைத்தது)
 • தேங்காய் மசாலா:
 • நட்சத்திர சோம்பு - 1/2
 • ஏலக்காய் காய்- 3
 • சீரகம் - 1/2 தேக்கரண்டி
 • கருமிளகு - 1.5 தேக்கரண்டி
 • பெருஞ்சீரகம் - 1.5 தேக்கரண்டி
 • இலவங்கப்பட்டை குச்சி - 1 இன்ச் குச்சி
 • மல்லி - 2 தேக்கரண்டி
 • காய்ந்த மிளகாய் - 6
 • செட்டிநாடு மசாலாத் தூளுக்காக:
 • பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி
 • கிராம்பு - 2
 • ஏலக்காய் மொட்டுகள் - 1
 • இலவங்கப்பட்டை - 1/2 இன்ச் குச்சி
 • முழு மசாலாக்கள்:
 • 1 தேக்கரணடி கடுகு எண்ணெய்/தேங்காய் எண்ணெய்
 • 1/2 தேக்கரண்டி பொடி செய்யப்பட்ட கருமிளகு
 • 1/2 தேக்கரண்டி உப்பு
 • மேரினேட் செய்வதற்கு:
 • கொத்துமல்லி - 1 தேக்கரண்டி அலங்கரிப்பதற்கு
 • தேவையான அளவு தண்ணீர்
 • மட்டன் - 250 கிராம் சதுரமாக வெட்டப்பட்டது
 • மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
 • காஷ்மீரத்து மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
 • மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
 • சுவைக்கேற்ற உப்பு
 • தக்காளி - 1 கப் பொடியாக நறுக்கப்பட்டது
 • பூண்டு - 4 பற்கள் பொடியாக நறுக்கப்பட்டது/துருவப்பட்டது
 • இஞ்சி - 1 துண்டு பொடியாக நறுக்கப்பட்டது/துருவப்பட்டது
 • கறிவேப்பிலை - 1 கொத்து
 • கறிவேப்பிலை - 1 கொத்து
 • பச்சை மிளகாய் - 1 பிளந்தது
 • வெங்காயம் - 3/4 கப் பொடியாக நறுக்கப்பட்டது
 • கடுகு/தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
 • எண்ணெய் - 1.5 தேக்கரண்டி

செட்டிநாடு மட்டன் குழம்பு செய்வது எப்படி | How to make Chettinad Lamb Curry ( Chettinad Lamb Kuzambhu ) in Tamil

 1. மட்டனைக் கழுவி சுத்தப்படுத்திக்கொள்ளவும். தட்டி உலரவைத்து கொஞ்சம் உப்பு, பொடி செய்யப்பட்ட கருமிளகு, 1 தேக்கரண்டி தேங்காய்/கடுகு எண்ணெய் சேர்த்து மேரினேட் செய்யவும்.
 2. கடாயை சூடுபடுத்திக்கொள்க. அதனோடு 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து மிதமானச் சூட்டில் 15 நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும். இது மட்டன் துண்டுகளில் அருமையான வறட்சியை கொடுத்து பின்னர் மட்டன் வேகுவதற்கு துரிதப்படுத்தும். எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 3. செட்டிநாடு மசாலா பவுடருக்காக அனைத்துப் பொருள்களையும் எண்ணெய் சேர்க்காமல் வறுத்துக்கொள்ளவும். (காய்ந்த மிளகாய், மல்லி, சீரகம், மிளகு, பெருஞ்சீரகம், இலவங்கப்பட்டை, நட்சத்திர சோம்பு, ஏலக்காய்). ஆறவிட்டு மென்மையானத் தூளாக அரைத்து எடுத்து வைக்கவும்.
 4. ஒரு மிக்சியில்/பிளண்டரில் பெருஞ்சீரகத்தோடு ஊறவைத்த தேங்காயை மென்மையானச் சாந்தாக அரைத்து எடுத்துவைக்கவும்.
 5. ஒரு பிரஷர் குக்கரைச் சூடுபடுத்தி ஒரு தேக்கரண்டி ரீபைண்டு எண்ணெய் 2 தேக்கரண்டி கடுகு/தேங்காய் எண்ணெய்சேர்க்கவும். முழு மசாலா (1 இன்ச் இலவங்கப்பட்டை, 2 கிராம்பு, 1 ஏலக்காய், 1/2 தேக்கரண்டி பெருஞ்சீரகம்) சேர்க்கவும். முழு மசாலாவில் இருந்து அருமையான வாசனை வரும்வரை சிறுதீயில் வதக்கவும்.
 6. வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாக, பளபளப்பாக வரும்வரை நடுத்தர தீயில் வதக்கவும். கறிவேப்பிலை சேர்க்கவும். 2-3 நிமிடங்கள் இலைகள் மொறுமொறுப்பாகும்வரை வதக்கவும்.
 7. தக்காளி, அரைத்த செட்டிநாடு மசாலா பவுடர், மஞ்சள்தூள், காஷ்மீர் மிளகாய்த்தூள், மிளகாய்த்தூள், சுவைக்கேற்ற உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். வறுத்த மட்டன் துண்டுகளைச் சேர்க்கவும். தக்காளி மிருதுவாகவும் கூழாகவும் மாறும்வரை நன்றாகக் கலக்கவும்.
 8. குக்கரில் 2.5 கப் தண்ணீர் சேர்க்கவும் (அல்லது உங்கள் தேவைக்கேற்ற குழம்பு பதத்திற்கு). பிரஷர் குக்கரை மூடியிட்டு 2 விசில் வரும்வரை மிதமானச் சூட்டில் வைக்கவும். தீயை அடக்கி 20 நிமிடங்கள் வேகவைக்கவும்.
 9. அடுப்பை நிறுத்திவிட்டு ஆறவிடவும். குக்கரில் ஆவி அடங்கியதும், குக்கரின் மூடியைத் திறந்து மட்டன் குழம்பை ஒரு வானலிக்கு மாற்றிக்கொள்ளவும்.
 10. வானலியைச் சூடுபடுத்தி அதனோடு தேங்காய் சாந்தை சேர்க்கவும். தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். கலக்கிக் கலந்துகொள்ளவும். வானலியை ஒரு மூடியால் மூடி சிம்மில் சிறுதீயில் 15 நிமிடங்களுக்கு அல்லது மேலே எண்ணெய் மிதப்பதை நீங்கள் பார்க்கும்வரை வைக்கவும்.
 11. நறுக்கப்பட்டக் கொத்துமல்லியால் அலங்கரித்துச் சூடாகப் பரிமாறவும்.

Reviews for Chettinad Lamb Curry ( Chettinad Lamb Kuzambhu ) in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.