வீடு / சமையல் குறிப்பு / சின்ன வெங்காயம் சீரக துவையல்

Photo of Small onions and cumin seeds chutney by Divya  at BetterButter
0
3
0(0)
0

சின்ன வெங்காயம் சீரக துவையல்

Jun-25-2018
Divya
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சின்ன வெங்காயம் சீரக துவையல் செய்முறை பற்றி

ஆரோக்கியம் நிறைந்த சின்ன வெங்காயம், சீரகம் ஆகியவை சேர்த்து அரைக்கப்படும் சட்னி/துவையல்.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • మిళితం
  • మితముగా వేయించుట
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சின்ன வெங்காயம் 15 முதல் 20
  2. சீரகம் ஒரு மேசைக்கரண்டி
  3. உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
  4. பூண்டு 4 பற்கள்
  5. இஞ்சி ஒரு அங்குலத் துண்டு
  6. காய்ந்த மிளகாய் மூன்று
  7. புளி சிறிய கோலி குண்டு அளவு
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. எண்ணெய் ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம், பூண்டு இஞ்சி ,காய்ந்த மிளகாய்,உளுத்தம்பருப்பு அகியவற்றை முதலில் நன்றாக வதக்கவும்.
  3. வெங்காயம் வதங்கியதும் சீரகத்தை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.சீரகம் தீயாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
  4. இவை அனைத்தையும் உப்பு, புளி சேர்த்து தண்ணீர் தெளித்து கெட்டியான துவையலாக அரைத்துக் கொள்ளவும்.
  5. சுவையான ஆரோக்கியமான சின்ன வெங்காயம் சீரகம் சட்னி/துவையல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்