வீடு / சமையல் குறிப்பு / காய்கறி ஊறுகாய்

Photo of Mixed vegetable pickle by Divya  at BetterButter
2842
2
0.0(0)
0

காய்கறி ஊறுகாய்

Jun-25-2018
Divya
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

காய்கறி ஊறுகாய் செய்முறை பற்றி

பல வண்ண காய்கள் சேர்த்து செய்யப்படும் நம் பாரம்பரிய ஊறுகாய் வகை.

செய்முறை டாக்ஸ்

  • பிக்கிலிங்
  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • அக்கம்பனிமென்ட்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கலந்த காய்கறி வகைகள் (காரட், பீன்ஸ்,பட்டாணி,கொத்தவரங்காய், அவரைக்காய், பாகற்காய்,உருளைக்கிழங்கு,காலிபிளவர், வாழைக்காய்),2 கப்
  2. மாங்காய்-1/2 காய்
  3. எலுமிச்சை பழம் 2
  4. மிளகாய் தூள் 1/2 கப்
  5. மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
  6. பொடித்த கல்லுப்பு 1/2 -3/4 கப்
  7. நல்லெண்ணெய் 3/4 கப்
  8. வெந்தய பொடி ஒரு டீஸ்பூன்
  9. கடுகு பொடி ஒரு டீஸ்பூன்
  10. எலுமிச்சை சாறு 1/2 கப்
  11. கடுகு ஒரு டீஸ்பூன்
  12. சீரகம் 1 டீஸ்பூன்
  13. கருவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. காய்கறிகளை கழுவி ஈரம் போக நன்கு துடைத்து துண்டுகளாக வெட்டவும்.
  2. ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகள் மற்றும் மாங்காய், நறுக்கிய எலுமிச்சை பழம் போட்டு அதனுடன் பொடித்த கல் உப்பு, மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள், வெந்தயப்பொடி, கடுகுப் பொடி,எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலக்கவும்.
  3. எண்ணெய் சிறிது சூடாக்கி அந்த கலவையில் பாதி ஊற்றவும்.
  4. பிறகு மீதமுள்ள எண்ணெயில் கடுகு,சீரகம் ,கருவேப்பிலை ,தாளித்து அதன் மேல் ஊற்றி நன்றாக கிளறி விடவும்.
  5. இந்த ஊறுகாயை கைபடாமல் நன்றாக மூடி வைக்கவும்.
  6. மறுநாள் ஊறுகாயில் எண்ணெய் இருக்கிறதா என்பதை கவனிக்கவும் இல்லையென்றால் சிறிது நல்லெண்ணெயை சூடாக்கி அதன் மேல் ஊற்றவும்.
  7. ஊறுகாய் ஜாடியில் இந்த ஊறுகாயை மாற்றி வைக்கவும்
  8. இரண்டு மூன்று நாட்கள் கழித்து ஊறுகாயை பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்