வீடு / சமையல் குறிப்பு / திணை அரிசி சாம்பார் சாதம்

Photo of Thinai Arisi (Foxtail Millet) Sambar Sadham by Sri Vidhya at BetterButter
3443
13
0.0(0)
0

திணை அரிசி சாம்பார் சாதம்

May-21-2016
Sri Vidhya
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. திணை - 1 கப்
  2. துவரம்பருப்பு - 1/3 கப்
  3. கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
  4. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  5. கசகசா - 1/2 தேக்கரண்டி
  6. மல்லி - 2 தேக்கரண்டி
  7. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
  8. சீரகம் - 1/4 தேக்கரண்டி
  9. சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
  10. தேங்காய் - 1/4 கப்
  11. மஞ்சள் தூள் - 1/4
  12. கடுகு - 1/2 தேக்கரண்டி
  13. கறிவேப்பிலை - கொஞ்சம்
  14. கொத்துமல்லி அலங்கரிப்பதற்காக
  15. பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
  16. நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
  17. நெய் - 1 தேக்கரண்டி
  18. முந்திரிபருப்பு - 6
  19. சின்ன வெங்காயம் - 15
  20. தக்காளி - 1 நறுக்கப்பட்டது
  21. காய்கறி ஏதாவது - நறுக்கப்பட்டது 2 கப்
  22. புளித்தண்ணீர் - 1/4 கப் அல்லது சுவைக்கேற்றவாறு
  23. சுவைக்கேற்ற உப்பு
  24. வெல்லம் - 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. திணையையும் துவரம்பருப்பையும் ஒன்றாகக் கழுவி 5 கப் தண்ணீரோடு ஒரு மணி நேரத்திற்கு ஊறவைத்து பிரஷர் குக்கரில் 5-7 விசில்களுக்கு வெகவைக்கவும். திணையையும் பருப்பையும் மிருதுவாக இருக்கவேண்டும்.
  2. ஒரு தேக்கரண்டி எண்ணெய்விட்டு கடாயைச் சூடுபடுத்திக்கொள்ளவும். எண்ணெய் சூடானதும், கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, கசகசா, மல்லி, வெந்தயம், சீரகம் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
  3. கடாயை சூடுபடுத்தி மீதமுள்ள எண்ணெய்யைச் சேர்க்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், சின்ன வெங்காயம், காய்கறிகள், பாதி கப் தண்ணீர் சேர்க்கவும். மூடியிட்டு காய்கறிகள் மிருதுவாகும்வரை வேகும்வரை சமைக்கவும்.
  4. அதன்பின் நறுக்கப்பட்ட தக்காளி, அரைத்த மசாலா சாந்து, புளி, சாம்பார் பொடி, உப்பு, வெல்லம் சேர்த்து 5 நிமிடங்கள் சிறுதீயில் வேகவைக்கவும்.
  5. இப்போது வேகவைத்த தினையையும் பருப்பையும் சேர்க்கவும். தேவையான பதத்திற்கு அதிகமானத் தண்ணீர் சேர்க்கவும்.
  6. சிறிது கொத்துமல்லியையும் நெய்யில் வறுத்த முந்திரி பருப்பையும் கொண்டு அலங்கரிக்கவும்.
  7. அப்பளம் அல்லது ஊறுகாயுடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்