வீடு / சமையல் குறிப்பு / புதினா பன்னீர் கிரேவி

Photo of Pudina Paneer Gravy by Sowmya Sundar at BetterButter
433
2
0.0(0)
0

புதினா பன்னீர் கிரேவி

Jun-25-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புதினா பன்னீர் கிரேவி செய்முறை பற்றி

பாலக் பன்னீர் செய்வதற்கு மாற்றாக புதினா கிரேவியில் பன்னீர் சேர்த்து செய்யும் சைட் டிஷ்.சப்பாத்தி மற்றும் ரைஸுடன் தொட்டு கொள்ளலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • இந்திய
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பன்னீர் - 100 கிராம்
  2. வெங்காயம்-1 நறுக்கியது
  3. புதினா இலைகள்- 1/2 கப்
  4. கொத்தமல்லி இலை-1/4 கப்
  5. பச்சை மிளகாய்-3
  6. இஞ்சி-1 துண்டு
  7. பூண்டு-4 பல்
  8. தயிர்-1/4 கப்
  9. உப்பு தேவையான அளவு
  10. கரம் மசாலா தூள் -1/2 டீஸ்பூன்
  11. மிளகு தூள்-1/2 டீஸ்பூன்
  12. தேங்காய் துருவல்-2 டேபிள் ஸ்பூன்
  13. எலுமிச்சை சாறு-1 டீஸ்பூன்
  14. வெண்ணெய்-2 டேபிள் ஸ்பூன்
  15. சீரகம்-1 டீஸ்பூன்
  16. பட்டை -1 துண்டு
  17. கிராம்பு-4

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு,தேங்காய் சேர்த்து தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும்
  2. கடாயில் வெண்ணெய் போட்டு காய்ந்ததும் நறுக்கிய பன்னீர் துண்டுகளை லேசாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
  3. அதே வெண்ணெயில் சீரகம் பட்டை கிராம்பு தாளித்து வெங்காயம் ,உப்பு சேர்த்து வதக்கவும். பின் அரைத்த விழுதை போட்டு வதக்கவும்.
  4. நிறம் மாறாமல் வதங்கியதும் கரம் மசாலா பொடி ,மிளகு தூள், தயிர் மற்றும் வறுத்த பன்னீர் சேர்த்து கொதிக்க விடவும்
  5. எல்லாம் சேர்ந்து இரண்டு நிமிடங்கள் கொதித்ததும் எலுமிச்சை சாற்றை கலந்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்